சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகச் சுற்றுலா

சபிதா ஜெய­கு­மார்

சிங்­கப்­பூ­ரைக் கட்­டி­யெ­ழுப்­பப் பாடு­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் அமை­ய­வுள்ளது சிங்­கப்­பூர்ச் சிற்­பி­கள் நினை­வ­கம். அதன் முன்­னோடி நிகழ்­வாக ‘புத்­து­ணர்வு: ஒரு புதிய சிங்­கப்­பூர் உணர்வை உரு­வாக்­கு­வோம்’ எனும் இரு­வ­ழித்­தொ­டர்பு பேருந்­துச் சுற்­று­லாக்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

“நம் தேசத்­தின் எதிர்­காலத்தை எவ்­வாறு இணைந்து வடி­வ­மைக்­க­லாம்? என்பது போன்ற கேள்விக­ளுக்கு பதில்­ தேட இந்தக் கண்­காட்சிப் பய­ணம் உதவும்,” என்று கூறு­கிறது சிங்கப்­பூர்ச் சிற்­பி­கள் நினை­வ­கம்.

“சிங்­கப்­பூர்ச் சிற்­பி­கள் நினை வ­கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கதை­களை எடுத்­துச்­சொல்­லும் வகை­யில் அமை­வது நோக்­கம். தேசத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் கொண்டுள்ள ஈடு­பாட்டை வளர்க்க இது­போல பல தளங்­களை உரு­வாக்­கு வோம்,” என்று கூறி­னார் சிற்­பி­கள் நினை­வகக் குழு­வின் துணைத் தலை­வர் திரு லீ ஸு யாங்.

சிங்­கப்­பூ­ரின் அடித்­த­ளத்தை வலி­மை­யா­ன­தாக உரு­வாக்கப் போரா­டி­ய­வர்­க­ளின் வீரத்­தை­யும் சிந்­த­னை­யை­யும் போற்­றும் வகை­யில் கண்­காட்சி அமை­யும்.

சிங்­கப்­பூர் தலை­வர்­களும் மக்களும் ஒன்­று­தி­ரண்டு நவீன சிங்கப்­பூ­ரைக் கட்­டி­யெ­ழுப்­பிய தொடக்க காலத்­தில் அவர்­களிடம் இருந்த, பன்­முகக் கலா­சா­ரத்­தைப் பாராட்­டும் தன்மை, துணிவு, மீள்­தி­றன் முத­லிய விழுமி­யங்­களை பறை­சாற்­றும் கதை­களும் கண்­காட்­சி­யில் உள்ள­டங்­கும். இவ்­வி­ழு­மி­யங்­கள்­தான் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய அம்சங்­க­ளாக வலுப்­பெற்­றுள்­ளன.

கண்­காட்சி சில சிறப்பு அம்­சங்­க­ளு­டன் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இக்­கண்­காட்சி பங்­கேற்­பாளர்­க­ளுக்­குத் தனிப்­பட்ட கதை­சொல்­லும் அனு­ப­வத்­தைத் தருகிறது. சுவா­ர­சி­ய­மான அனு­பவத்தை வழங்­கும் வகை­யில் பயண வழி­காட்­டி­கள் சிங்­கப்­பூர் வர­லாற்­றில் இடம்­பி­டித்த முக்­கி­ய­மா­ன­வர்­கள் போன்று பாவனை செய்து கண்­காட்­சி­யைச் சுற்­றிக்­காட்­டு­வர்.

“பேருந்­தில் ஏறி­யது முதல் இறு­தி­வரை பொது­மக்­கள் பல்­வேறு கதை­கள் மூலம் சிங்­கப்­பூரின் வர­லாற்­றை­யும் முற்காலத் தில் வாழ்ந்த மக்­க­ளின் அனு­ப­வங்­களை­யும் அறிந்­து­கொள்ள முடி­யும். பின்­னோக்கி கடந்த காலத்­திற்கு செல்­லும் அனு­ப­வத்தை வழங்­கு­வதே எங்­கள் நோக்­கம்,” என்று குறிப்­பிட்­டார் சிங்­கப்­பூர்ச் சிற்­பி­கள் நினை­வ­கத்­தின் பங்­காளித்­து­வம், ஈடு­ப­டுத்­தல் பிரிவுக்­கான மூத்த மேலா­ளர் திரு­வாட்டி கிரேஸ் லாவ்.

நவீன சிங்­கப்­பூ­ரைக் கட்­டி­யெழுப்­பு­வ­தில் முக்­கி­யப் பங்கு வகித்த சிங்­கப்­பூ­ரின் முதல் பிரத­ம­ரான திரு லீ குவான் இயூ­வின் 100வது பிறந்­த­நாள் இவ்­வாண்டு கொண்­டா­டப்­ப­டு­கிறது.

அவ­ரது பங்­க­ளிப்­பு­க­ளை­யும் அவர் வகுத்த கொள்­கை­க­ளை­யும் நினை­வு­கூரும் வகை­யில், அவ­ரு­டைய செயல்­கள் எவ்­வாறு தேசத்­தின் பய­ணத்தை வடி­வமைத்­தன என்­பதை விளக்­கும் அங்­கங்­களும் கண்­காட்­சி­யில் இடம்­பெ­றும்.

சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொரு­ள­கத்­து­டன் இணைந்து படைக்­கப்­ப­டு­ம் இந்தக் கண்­காட்சியைக் காண பேருந்­துச் சுற்­று­லாக்­கள் ஜூன் 18ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 29ஆம் தேதி வரை இடம்பெறும்.

சுற்றுலாவின் பங்கேற்புக் கட்டணம் $5. இப்பயணம் குறிப்பிட்ட சில எம்ஆர்டி நிலையங்களில் தொடங்கும்.

கலந்­து­கொள்­வோ­ருக்கு சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்ட அன்­பளிப்புப் பை இருப்பு உள்­ள­வரை வழங்­கப்­படும்.

சுற்­றுலா ஆங்­கி­லத்­தில் நடத்­தப்­படும். தமிழ், சீனம், மலாய் மொழி­களில் சுற்­றுலா வழி­காட்­டலை விரும்­பு­வோர் குழுக்­க­ளாக விண்­ணப்­பிக்­க­லாம். விண்­ணப்­பம் செய்ய founders_memorial@nhb.gov.sg என்ற மின்­னஞ்­ச­லுக்கு எழு­த­வும். மேல்விவ­ரங்­களுக்­கும் பதி­வுக்­கும்: go.gov.sg/sybbustour

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!