நமது அடையாளத்தைக் காக்க தாய்மொழியில் பேச வேண்டும்

கரு­ணா­நிதி துர்கா

சிங்­கப்­பூ­ரில் தமிழ் பேசும் சமூ­கத்­தி­ன­ரி­டையே தமிழ்ப் புழக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தோடு இளை­யர்­க­ளி­டம் மொழி ஆர்­வத்தை வளர்க்க வேண்­டும். மொழி­தான் நமது அடை­யா­ளம். அதனை தொடர்ந்து கட்டிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழுத் தலைவரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் வலியுறுத்தி உள்ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் பிடி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் முழு­மை­யாக மீண்­டுள்ள இந்த ஆண்­டில், தமிழ்­மொழி விழா மீண்­டும் நேர­டி­யாக நடை­பெற்­றது. 17வது முறை­யாக தமிழ்­மொழி விழாவை வெற்றிகரமாக நடத்திய இணை ஏற்பாட்டாளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் விருந்து உபசரிப்பு விழாவை வளர்தமிழ் இயக்கம் ஏற்று நடத்தியது.

சிங்­கப்­பூர் கல்சா சங்­கத்­தில் மே 29ஆம் தேதி­யன்று நடை­பெற்ற அந்­நி­கழ்ச்­சி­யில் ஏறத்­தாழ 100 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

இவ்­வாண்டு தமிழ்மொழி விழா­வில் இடம்­பெற்ற நிகழ்ச்சிகள் பல்­வேறு வய­தினரை­யும் சென்­ற­டை­யும் வகை­யில் இருந்­த­தோடு மக்­க­ளி­டத்­தில் வர­வேற்­பைப் பெற்­ற­தை­யும் உணரமுடிந்­த­தா­கக் கூறி­னார், கல்வி அமைச்­சின் தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு­வின் தலை­வ­ரு­மான விக்­ரம் நாயர்.

இந்த ஆண்டு 67 விழுக்­காடு நிகழ்ச்­சி­கள் மாண­வர்­கள், இளை­யர்­களை இலக்­கா­கக்­கொண்டு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. மேலும், அனைத்து நிகழ்ச்­சி­க­ளி­லும் மாண­வர்­க­ளின் பங்­கேற்பு இருந்­ததை மகிழ்ச்­சி­யோடு குறிப்­பிட்­டார் வளர்­த­மிழ் இயக்­கத் துணைத் தலை­வர் திரு ஜோதி மாணிக்­க­வா­ச­கம்.

“சிங்கைத் தமிழ்ச் சங்­கத்­தின் ‘சொல்­லைத் தாண்டி வரு­வாயா’ நிகழ்ச்­சி­யில் அதி­க­மான இளை­யர்­கள் கலந்­து­கொண்­ட­தோடு ஏற்­பாட்டுக் குழு­வில் சேர­வும் பலர் முன்­வந்­த­னர்,” என்­றார் சிங்­கைத் தமிழ்ச் சங்­கத்­தின் இளை­யர் பிரி­வு தலை­வ­ரும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வரு­மா­ன மூலா வெங்கடேஷ் அஷ்­வினி.

“கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லுக்குப் பின்­னர் சிறார்­க­ளுக்­கான நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து அவற்­றின் முதன்மை நோக்­கங்­க­ளை­யும் முழு­மை­யாகப் பூர்த்தி செய்­த­தில் மிக்க மகிழ்ச்சி,” என்று கூறி­னார் இளம்­ப­ருவ வளர்ச்­சிக்­கான தேசி­யக் கல்­விக் கழ­கம் நடத்­திய ‘அன்பு + ஆரா­தனை = நம்­மி­டம்’ என்ற நிகழ்ச்­சி­யின் ஏற்­பாடுக் குழு தலை­வ­ரான அருண் ஜூட் லோபெஸ்.

“இளை­யர்­கள் தமி­ழில் பேசு­வதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் அவர்­கள் விரும்­பும் நிகழ்ச்­சி­களை வளர்­த­மிழ் இயக்­கம் தொடர்ந்து ஏற்­பாடு செய்­யும். எந்த நிகழ்ச்­சி­யும் இரண்டு மணி நேரத்­துக்­குள் முடிந்தால் சிறப்­பாக இருக்­கும்,” என்­றார் திரு விக்­ரம் நாயர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!