தமிழவேளை நினைவுகூர்ந்த தமிழர் விழா

தமிழ்ச் சமூ­கத்­தின் தனிப்­பெ­ரும் தலை­வ­ரா­கத் திகழ்ந்த ‘தமி­ழ­வேள்’ கோ சாரங்­க­பா­ணியை நினை­வு­கூ­ரும் வகை­யில் மலே­சிய இந்து சங்கம் ஸ்கூ­டாய் பேரவை மே 20ஆம் தேதி தமி­ழர் திரு­நா­ளைக் கொண்­டா­டி­யது. ஜோகூர் பாரு­வி­லுள்ள ஸ்கூ­டாய் தாமான் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கிட்­டத்­தட்ட 500 பேர் பங்­கேற்­ற­னர்.

சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்று தமி­ழர் திரு­நாள் பற்றி உரை­யாற்­றிய மாநில ஆட்­சிக்­குழு உறுப்­பி­னர் கி. ரவின்­கு­மார், மலே­சி­யர்­க­ளின் தமிழ்ப் படைப்­பு­க­ளைக்­கொண்ட 100 பக்க விழா­ம­லரை வெளி­யிட்­டார். திரு சாரங்­க­பா­ணி­யை­யும் அவ­ரைப் போன்ற முன்­னோ­டி­க­ளை­யும் வருங்­கா­லச் சந்­த­தி­யி­னர் நினை­வில் நிறுத்த 4வது ஆண்­டாக இந்­நி­கழ்ச்சி நடத்­தப்­ப­டு­வ­தாக ஏற்­பாட்­டுக்­கு­ழுத் தலை­வர் சேக­ரன் கன்னி­யப்­பன் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

“ மலேசிய தமிழ்ச் சமூகத்திற்குத் தமிழவேளின் பங்கு மிகவும் அளப்பரியது. தமிழர் மணிமன்றத்தை அவர் எங்களுக்காகத் தொடங்கிவைத்தார். அவரது பாணியில் நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மரபைக் கட்டிக்காக இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்,” என்றார் திரு சேகரன்.

மியன்­மா­ரில் தமிழ்­மொழி வளர்ச்­சியை ஊக்­கு­விக்க கோ. சாரங்­க­பா­ணி­யின் பெய­ரில் தமிழ்ப்­ப­ணி­க­ளைச் செய்­து­வ­ரும் திரு சேக­ரன், இந்­நி­கழ்ச்­சி­யின் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது பெற்­றது குறித்து மகிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறி­னார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் ஒருவரான மூத்த கல்வியாளரும் முன்னாள் வானொலி படைப்பாளருமான திருமதி மீனாட்சி சபாபதி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத்  தொடக்கி வைத்ததுடன் வாழ்த்துரை ஒன்றையும் ஆற்றினார்.

நம்மை நாம் அறிந்தால் வாழ்வில் உயராலாம் என்று தம் உரையில் குறிப்பிட்ட திருமதி மீனாட்சி, பிறர் கேள்விகளுக்கு உரிய விடைகளைத் தருவதற்கு நாம் நம் பண்பாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம் எனக் கூறினார். பண்டைய இலக்கியங்களை உரக்க வாசிக்கும்போது அதன் ஓசைநயம் நம்மை அமைதி அடையச் செய்யும் என்றும் அவர் சொன்னார். 

சிங்­கப்­பூ­ரின் திரு கோ. சாரங்­க­பாணி மலே­சி­யா­வி­லும் போற்­றப்­ப­டு­வ­தைக் காணும்­போது மகிழ்ச்­சி­யா­க­வும் பெரு­மை­யா­க­வும் இருப்­ப­தாக சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான திருமதி சுமதி துரை அரசு, 43, தெரி­வித்­தார்.

“ஆங்­கி­லம் கலக்­கா­மல் இயன்­ற­வரை தூய தமி­ழி­லில் பேசி­னேன். அதற்­காக நிகழ்ச்­சி­யில் இருந்­த­வர்­கள் என்­னைப் பாராட்­டி­னார்­கள்,” என்­றார் திரு­மதி சுமதி­யின் மகன் வீர் ஆதித்ய ஹரிஹர­ரா­யன். இவர் ஹவ்­காங் தொடக்­கப் பள்­ளி­யில் பயில்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!