விலகி வாழ்ந்தாலும் விட முடியாத பந்தம்: தந்தைப் பாசம்

விலகி வாழ்ந்தாலும் விட முடியாத பந்தம்: தந்தைப் பாசம்

3 mins read
c6091e1a-4bda-458d-be6d-3ce68751647f
-
multi-img1 of 2

சபிதா ஜெய­கு­மார்

சூழ்­நி­லை­கள் தன்­னைப் பிள்­ளை­களி­டம் இருந்து விலக்கி வைத்­தா­லும் அவர்­க­ளுக்­கா­கவே உயிர் வாழ்­வ­தா­கக் கூறிய திரு நூர் முக­மது ஷா, சிறந்த தந்­தை­யாக விளங்­கும் நோக்­கில் கற்­ற­லில் இறங்கி உள்­ளார்.

தொழில்­நுட்­ப­ரா­கப் பணி­பு­ரி­யும் அவர் கருத்து வேறு­பாடு கார­ண­மாக ஐந்­தாண்டு கால­மா­கத் தன் மனை­வி­யைப் பிரிந்து வாழ்­கி­றார்.

பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மூன்று பிள்­ளை­களும் பாதிக்கப்படுவார்களே என்று எண்ணி மனம் துடித்­தார்.

"பிள்­ளை­கள் அதிக மன உளைச்­ச­லுக்கு ஆளாகி அது அவர்­கள் கல்­வி­யை­யும் உடல்­ந­லத்­தை­யும் பாதிக்­குமோ என்று வருந்­தி­னேன்," என்­றார் நூர்.

குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் ஒரே கூரை­யின்­கீழ் இல்­லையே என்ற கவலை பிள்­ளை­க­ளின் மனத்­தில் எதிர்­ம­றை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டுமோ என்று அஞ்­சி­ய­தா­கக் கூறி­னார் அவர்.

பிள்­ளை­க­ளு­டன் வாழ்ந்த காலத்­தில் நடந்த சம்­ப­வங்­க­ளின் நினைவு மனத்­தில் தோன்­றும்­போ­தெல்­லாம் அவர்­க­ளைக் காண உள்­ளம் ஏங்­கும் என்­றார் நூர்.

"நிச்­ச­ய­மாக, இது­போன்ற சூழலை ஏற்­றுக்­கொள்­வது மிகக் கடி­ன­மான சவால். ஒவ்­வொரு முறை சந்­தித்­துப் பிரி­யும்­போ­தும் அவர்­க­ளின் கவ­லை­யான முகங்­கள் என்னை வாட்­டும்," என்­றார் அவர்.

பிள்­ளை­கள் தற்­போது தாயின் பாது­காப்­பில் உள்­ள­னர்.

அதி­கா­ரி­கள் அனு­ம­திக்­கும் கால அள­வில் மட்­டுமே அவர் தன் பிள்­ளை­க­ளைச் சந்­தித்து நேரம் செல­விட முடி­கிறது.

வெவ்­வேறு நேரங்­களில் வேலை­பார்க்க வேண்­டி­யி­ருப்­ப­தால் குழந்­தை­க­ளு­டன் நேரத்­தைச் செல­வி­டும் வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றி­வது கடி­ன­மாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அதிக நேரம் அவர்­க­ளு­டன் செல­விட முடி­யா­தது தனக்­குப் பெரும் மன வலி­யைத் தரு­வ­தா­கக் கூறும் அவர் பிள்­ளை­க­ளு­டன் கூடு­தல் நேரம் செல­விட முன்­வைத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

முன்பு பிள்­ளை­கள் தவறு செய்­தால் கண்­டிக்­கும் வேளை­யில் அதி­கம் சின­முற்­ற­தா­கக் குறிப்­பிட்ட நூர், தான் அப்­போது கடு­மை­யாக நடந்­து­கொண்­டதை எண்ணி இப்­போது வருந்­து­கி­றார்.

பிள்­ளை­க­ளு­டன் நேரம் செல­விட சிண்டா எனப்படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் ஏற்­பாடு செய்­யும் நட­வ­டிக்­கை­கள் பல­வற்­றில் கலந்­து­கொள்­கி­றார்.

அந்­ந­ட­வ­டிக்­கை­கள் பிள்­ளை­களின் வாழ்­வில் என்ன நடக்­கிறது என்­ப­தைத் தெரிந்­து­கொள்­ள­வும் அவர் வாழ்­வில் நடந்­த­வற்றை அவர்­க­ளி­டம் பகிர்ந்­து­கொள்­ள­வும் வாய்ப்­ப­ளிக்­கின்­றன.

பெற்­றோ­ருக்­கு­ரிய பயி­ல­ரங்­கு­களில் நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் கலந்­து­கொண்டு தன் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த தந்­தை­யாக விளங்க முயல்­கி­றார் நூர்.

"தொடர்ந்து இது­போன்ற பயி­ல­ரங்­கு­க­ளுக்­குச் சென்று என்னை மேம்­ப­டுத்­திக்­கொண்டே இருப்­பேன்.

"பிள்­ளை­க­ளுக்கு ஏற்­ற­வாறு என் தொடர்­புத் திறன்­களை மெரு­கேற்­றிக்­கொள்ள இவ்­வ­குப்­பு­கள் உத­வு­கின்­றன," என்­றார் அவர்.

"முக்­கி­ய­மாக, பிள்­ளை­க­ளு­டன் சிறப்பு நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வது இனி­மை­யான நினை­வு­களை உரு­வாக்க வாய்ப்­ப­ளிக்­கின்­றன.

"என்­னால் முடிந்த அளவு அந்த நேரத்­தில் அவர்­க­ளுக்கு எல்­லை­யில்லா மகிழ்ச்­சியை வழங்க முயல்­வேன்," என்று கூறி­னார் நூர்.

பிள்­ளை­க­ளுக்­குத் தன் வாழ்­வில் அதிக முன்­னு­ரிமை வழங்­கும் அவர், அவர்­க­ளுக்­காக எப்­போ­தும் பொறு­மை­யு­டன் காத்­தி­ருக்­க­வும் எந்­தத் தயக்­க­மும் இன்றி தியா­கம் செய்­ய­வும் தயா­ராக உள்­ளார்.

"என் சொந்த எதிர்­பார்ப்­பு­கள் அவ்­வ­ளவு முக்­கி­ய­மில்லை. பிள்­ளை­க­ளுக்­காக நான் அய­ராது உழைப்­பேன்," என்று உறு­தி­யு­டன் கூறி­னார்.

பிள்­ளை­க­ளைப் பிரிந்து வாழும் நாள்­கள் அவர்­க­ளு­டன் செல­வி­டக் கிடைக்­கும் நொடி­களை விலை­மதிப்­பற்­ற­வை­யாக்­கு­கின்­றன என்று குறிப்­பிட்­டார்.

ஒவ்­வோர் ஆண்­டும் தந்­தை­யர் தினத்­தில் பிள்­ளை­கள் இது­வரை வழங்­கிய அன்­ப­ளிப்­பு­கள் அனைத்­தை­யும் பொக்­கி­ஷ­மா­கப் பாது­காத்து வரு­கி­றார்.

ஓவி­யத்­தில் அதிக ஈடு­பாடு கொண்­டுள்ள அவ­ரது மூத்த மகள் ஆர்­வத்­து­டன் வரைந்து தரும் வாழ்த்து அட்­டை­களை ஒவ்­வோர் ஆண்­டும் எதிர்­பார்த்­துக் காத்­திருப்­ப­தா­கக் கூறி­னார் நூர்.

"சூழ்­நி­லை­யால் குடும்­பத்­தில் விரி­சல் ஏற்­பட்­டா­லும் குழந்­தை­களை என்­றும் குறை­கூற முடி­யாது. என் பிள்­ளை­க­ளுக்கு ஒளி­ம­ய­மான எதிர்­கா­லம் அமைய வேண்­டும்.

"அவர்­கள் மேன்­மே­லும் திறன்­களை வளர்த்­துக்­கொண்டு வாழ்­வில் பல வெற்­றி­களை அடைய வாழ்த்­து­கி­றேன்," என்று கூறி­னார் திரு நூர்.

பிள்­ளை­க­ளின் வாழ்க்­கைப் பய­ணத்­தில் ஒரு நல்ல வழி­காட்­டி­யாக அங்­கம் வகிப்­பது மட்­டுமே தனது ஆசை என்றார் அவர்.