'நான் அறிந்த மொழிகளிலே நயமானது தமிழ்'

'நான் அறிந்த மொழிகளிலே நயமானது தமிழ்'

2 mins read
25a76e31-e270-4e55-a57a-d0aafa38adec
-

அஜ்­மினா பானு

உயர்­நி­லைப் பள்­ளி­யில் படித்­த­போது பிரெஞ்சு மொழி­யின்­பால் ஈர்க்­கப்­பட்ட ஹாமிது மரைக்­கா­ய­ருக்கு (படம்) இப்­போது ஏழு மொழி­கள் தெரி­யும். பல மொழி­க­ளைக் கற்­றுக்­கொண்டு பேசும் ஆர்­வத்­துக்கு ஆரம்­பப் புள்ளி அது என்­கி­றார் அவர்.

மொழி­க­ளைக் கற்­றுக்­கொள்ள 'டுவோ­லிங்கோ', 'டீச் யுவர்­செல்ஃப்' போன்ற செய­லி­களை இணை­யம்­வழி எளி­தில் பயன்­ப­டுத்த முடிந்­த­தால் அவ­ரது ஊக்­கம் அதி­கரித்­தது.

தற்­போது தேசிய கல்­விக் கழ­கத்­தில் முது­நிலைப் பட்­ட­யக் கல்­வியை மேற்­கொள்­கிறார் ஹாமிது.

"மொழி­யும் கலா­சா­ர­மும் அணுக்­க­மா­கப் பிணைந்­தவை" என்று கூறிய அவர், மொழி கலா­சா­ரத்தை அறி­வ­தற்­கான வாயில் என்­றார்.

வாய்ப்பு கிடைக்­கும்­போதெல்­லாம் உண­வங்­காடிக் கடைக்­கா­ரர்­க­ளி­டம் மலாய் மொழி­யி­லும் இந்தி பேசும் நண்­பர்­க­ளி­டம் இந்தி மொழி­யி­லும் உரை­யா­டு­வது அவ­ரது வழக்­கம்.

பிற்­கா­லத்­தில் பிரான்ஸ், ஸ்பெ­யின், அரபு நாடு­கள் ஆகி­ய­வற்­றுக்­குப் பய­ணம் செய்ய வாய்ப்­புக் கிடைத்­தால் அந்­நாட்டு மக்­க­ளி­டம் அவ­ர­வர் மொழி­யில் பேசிப் பழக விரும்­பு­கி­றார் ஹாமிது.

அவ்­வாறு பேசு­வ­தால் கூடுதல் புரிந்­து­ணர்வு ஏற்­படும் என்று கரு­தும் அவர், மொழி­க­ளின் மூலம் நட்­பை­யும் அன்­பை­யும் வளர்த்­துக் கொள்­வதே அவற்­றைத் தான் கற்­றுக்­கொள்­வ­தற்­கான முக்­கிய நோக்­கம் என்­றார்.

பிரெஞ்சு, ஸ்பா­னிஷ், அரபு மொழி­க­ளைப் பேச சிங்­கப்­பூரில் அதிக வாய்ப்­பில்லை. அவற்றை நினை­வில்­கொள்ள 'குவிஸ்­லட்', 'அன்கி' போன்ற செய­லி­களும் 'ஐடாக்கி' தள­மும் கைகொ­டுப்­ப­தா­க ஹாமிது கூறி­னார்.

இத்தொழில்­நுட்­பத் தளங்­கள் மொழி­யின் இலக்­க­ணம், வாக்­கிய அமைப்பு, சொல்­வ­ளம் போன்­ற­வற்­றைக் கற்­றுத்­தர இய­லுமே தவிர குறிப்­பிட்ட சூழல்­க­ளுக்­கேற்ப பதி­ல­ளிப்­ப­தைக் கற்­றுத்­தர இய­லாது.

அந்த நுணுக்­கங்­களை நேர­டி­யாக, மொழி தெரிந்­த­வரி­டம் கற்­றுக்­கொள்­வதே சிறப்பு என்­றார் ஹாமிது.

ஆங்­கி­லம், மலாய், இந்தி, ஸ்பா­னிஷ், பிரெஞ்சு, அரபு, தமிழ் மொழி­களை அறிந்­துள்ள அவர், தமி­ழின் நகைச்­சுவை, கேலி உணர்வை மற்ற மொழி­களில் உணர்ந்­தது இல்லை என்­றார்.

மேலும் பல மொழி­க­ளைக் கற்று, பல கலா­சா­ரங்­க­ளைத் தெரிந்­து­கொள்­ளும் முயற்­சி­யில் அடுத்­த­ப­டி­யாக மாண்­ட­ரின் மொழி­யைப் பயின்று சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­காரத்­துவ மொழி­க­ளை­யும் அறிந்த குடி­ம­க­னா­கத் திகழ்­வது ஹாமி­தின் விருப்­பம்.