'இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்' அறிமுக நிகழ்ச்சி

'இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்' அறிமுக நிகழ்ச்சி

1 mins read
4bf984be-ad23-4888-8a62-bc02b98f3faf
'இசைத்தமிழ்க் கலைஞர்கள் : நோக்கீட்டு நூல்' அறிமுக நிகழ்ச்சி. படம்: கலாமஞ்சரி -
multi-img1 of 2

முனைவர் மு. இளங்கோவனின் 'இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்' அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று (18 ஜுன்) நடைபெறுகிறது.

தமிழ் இசை பரப்பு மன்றத்தின் ஆதரவில் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

பூகிஸ் வட்டாரத்தில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் இருக்கும் பாசிபிலிட்டி அறையில் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் வாழ்த்துரை வழங்குவார்.

முனைவர் செல்லக்கிருஷ்ணன், முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு கண்ணன் சேஷாத்ரி, நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்வுள்ளனர்.

கலாமஞ்சரி நிறுவுநர் சௌந்தரநாயகி வயிரவன் வரவேற்புரையாற்றுவார்.

கவிஞர் பனசை நடராஜன் நிகழ்ச்சியை வழிநடத்தவுள்ளார்.

நிகழ்ச்சி நெறியாளர் திரு சித. கார்த்திக்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.