மதிப்புமிக்க ஊழியர்களைப் பாராட்டும் சிராஜுதீனுக்கு விருது

மனிதவளத் துறையில் ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த ஆண்டின் நட்சத்திர விருதைப் (HR Star Awards 2023) பெற்றுள்ளார் ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான திரு சிராஜுதீன் சையது முகமது.

‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆசியா’வின் இவ்விருதளிப்பு விழாவில் மனிதவளத்தில் சிறப்பு கவனம் கொண்ட சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி என்ற அங்கீகாரம் திரு சிராஜுதீனுக்கு வழங்கப்பட்டது.

“ராயல் கிங்ஸ் குழுமம் கொவிட்-19 காலகட்டத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கியது. அனைத்துலக வர்த்தகம் முடங்கி போனதுடன், எங்கள் பணிகள் ஆட்டம் கண்டன. இருப்பினும், எங்களுடன் இணைந்து பயணித்த ஊழியரணியை நாங்கள் இழக்கத் தயாராக இல்லை. அவர்கள் அனைவரையும் பயிற்சித் திட்டங்களில் கலந்துகொள்ள ஊக்குவித்துத் தொழில்நுட்பத்தைச் செயல்முறையில் இணைத்துக்கொண்டோம். தொழில் செய்த முறையை மாற்றி அமைத்து நிறுவனத்தைக் காத்தோம்,” எனத் தெரிவித்தார் திரு சிராஜுதீன்.

இவ்வாண்டு 10வது ஆண்டைக் கொண்டாடும் ராயல் கிங்ஸ் குழுமம் தொடர்ந்து சில விருதுகளை வென்று வருவது நிறுவனத்திற்காக உழைத்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றும் இதைப் பெருமையாக உணர்வதாகவும் திரு சிராஜுதீன் குறிப்பிட்டார்.

“சில விருதுகள் மிகவும் சிறப்பு மிக்கவை. எங்கள் இயக்குநர்களில் ஒருவர் வளர்ந்துவரும் பெண் தொழிலதிபர் விருதை வென்றுள்ளார்,” என்று பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்.

“குறிப்பாக, இந்த விருது என் தலைமைத்துவ திறன்களைப் பாராட்டி வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. சக ஊழியர்களுக்குச் சிறந்த வேலையிடச் சூழலை வழங்குவது எனது முக்கிய குறிக்கோள். முழு உழைப்பையும் செலுத்தி உழைத்த எனக்கும் என் அணியினருக்கும் கிடைத்த அங்கீகாரம் இது. மாறிவரும் உலக சூழலையும் எதிர்பாராமல் தோன்றிய பல இடையூறுகளையும் கடந்து ஐந்து ஆண்டு உழைப்பு நல்ல பயனளித்துள்ளது.

ராயல் கிங்ஸ் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு கேரி ஹாரிஸ், 48, “அன்பு செலுத்தும் நல்ல முதலாளியாக இருந்துள்ளார் சிராஜுதீன். வாடிக்கையாளர்கள் குறைந்த காலத்தில் நிறுவன ஊழியரணியைக் கைவிடாமல் அனைவரையும் நிறுவனத்தையும் வளர்த்தார். ஊழியர்களுக்கு மதிப்பு வழங்கி செயல்படுவார் சிராஜுதீன்,” என தெரிவித்தார்.

பல வெற்றிகளைக் கண்டுள்ள திரு சிராஜுதீனும் அவர் குழுவும் சமூகத்திற்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சமூக அவசரநிலைகளுக்கும் உதவி வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ள இவர்கள் முதலில் உடனடி உதவி வழங்குபவருக்கான விருதையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடமிருந்து பெற்றுள்ளனர்.

45 வயதாகும் திரு சிராஜுதீன் தொடர்ந்து தமது திறன்களை வளர்த்துக்கொண்டு நிறுவனம் சிங்கப்பூரிலும் உலக அளவிலும் நம்பகமான நிறுவனமாக நீடித்திருக்க உழைப்பேன் என உறுதியுடன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!