‘லிஷா’, ‘லிஷா’ பெண்கள் பிரிவு இணைந்து தீபாவளியையொட்டி சனிக்கிழமை அக்டோபர் 7 ரங்கோலிப் பயிலரங்கை தேக்கா பிளேஸ்’ மேல்தளத்தில் வழங்கினர்.
முதலில் 50 பேருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, அமோக வரவேற்பினால் 100 பேர் கலந்துகொள்ளும் வகையில் காலை 11 முதல் 12 வரையிலும் மதியம் 12 முதல் 1 மணி வரையிலும் இரு அங்கங்களாக நடைபெற்றது.
“தீபாவளி என்றாலே அனைவரும் வீட்டிற்கு வெளியே வண்ணக் கோலங்கள் போட ஆசைப்படுவதுண்டு. ரங்கோலியைப் பற்றி அனைத்து இனத்தாரும் கற்றுக்கொள்ளவேண்டும் என இப்பயிலரங்கை ஏற்பாடு செய்தோம்,” என்றார் லிஷா பெண்கள் பிரிவின் தலைவியும் லிஷா துணைத் தலைவியுமான திருமதி இராஜலெட்சுமி கண்ணப்பன்.
அனைத்து இனத்தாரும் வயதினரும் கலந்துகொள்ளும்படியான சுவாரசியமான நடவடிக்கையாக அமைந்தது பயிலரங்கு.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தது சுதா ரவி ரங்கோலி.
திருமதி சுதா ரவியும் அவரது மகளும் இணைந்து ரங்கோலியில் இதுவரை நான்கு சாதனைகளைப் படைத்துள்ளனர். இவ்வாண்டு 26,000 பாப்ஸ்சிக்கல் குச்சிகளைக் கொண்டு ஆறு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் அகலம் கொண்ட வண்ண ரங்கோலியை உருவாக்கி சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தனர்

