விருதுகள் பலவற்றை வென்ற பாடகரான டாக்டர் வைக்கம் விஜயலட்சுமி பார்வையற்றவர். அவரும், பார்வைக் குறைபாடுள்ள இர்வின் விக்டோரியாவும் இணைந்து ‘இன்னிசை சங்கமம்’ எனும் இசைநிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
சனிக்கிழமை, நவம்பர் 4ஆம் தேதி, மாலை 6 மணிக்கு ‘கார்னிவல்’ திரையரங்குகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், உள்ளூர்ப் பாடகர்கள் பரசு கல்யாண், சுதாஷினி ராஜேந்திரன், கலையரசி சொக்கலிங்கம், நடராஜன் ஆகியோரும் பாடவுள்ளனர்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் குரேஷி, ஜாக்குலின் இருவரும் நெறியாளர்களாகப் பங்குபெறவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை ‘8 பாய்ண்ட் எண்டர்டெய்ன்மண்ட்’, ‘எம்எம்எம் ஒப்பந்தச் சேவைகள்’ ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
ஒவ்வொரு நுழைவுச்சீட்டின் கட்டணத்திலும் ஒரு பங்கு சிங்கப்பூர் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்திற்கு (எஸ்ஏவிஹெச்) வழங்கப்படும்.
சிறப்புத் தேவை அல்லது உடற்குறை உடையோர்க்கு அனுமதி இலவசம். இத்தகையோர் ‘8 பாய்ண்ட் எண்டர்டெய்ன்மண்ட்’டை முன்கூட்டியே தொடர்புகொண்டு இலவச நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.
நுழைவுச்சீட்டுகளுக்கு, https://sg.bookmyshow.com/e/8POINTE2n இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.