அலுவலகத்திலிருந்து களைப்போடு திரும்புவோர், குடும்பங்கள், சுற்றுப்பயணிகள் என அனைத்து பிரிவினருக்கும் புத்துணர்ச்சியூட்ட மத்திய வர்த்தக வட்டாரத்தில் அஞ்சனா உணவகத்தின் புதிய கிளை திறந்துள்ளது.
வாரத்தின் ஏழு நாள்களும் இங்கு சைவ, அசைவ அறுசுவை உணவை எதிர்ப்பார்க்கலாம். மறுமலர்ச்சி பெற விரும்புவோருக்கான மதுக்கூடமும் இங்கிருக்கிறது.

சுவை மாறாது இருக்க தென்னிந்திய, வட இந்திய உணவு வகைகளை வெவ்வேறு சமையல்காரர்கள் தயாரிக்கின்றனர்.
இக்கிளையைத் தொடங்கியுள்ள அஞ்சனா உணவக நிறுவனர் திருவாட்டி பூபேந்திரன் ஜோதி, முதல் கிளையில் கிடைத்த வரவேற்பை இங்கும் எதிர்ப்பார்க்கிறார்.
“முதல் கிளையைவிட இரண்டாவது கிளையில் எங்கள் முதலீடு அதிகம்,” என்றார்.
“எனினும், மக்களிடத்தில் நாங்கள் ஈட்டியுள்ள நற்பெயரால் இக்கிளையும் சிறப்பாகச் செய்யும் என நம்புகிறோம்,” என்கிறார்.
தாலி, வாட்டிய உணவு வகைகள், பிரியாணி போன்றவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.

சமோசா வியாபாரத்தோடு தொடங்கிய வணிகம்
ஒரு காலத்தில் தன் வீட்டிலிருந்தே சமோசாக்களை விற்ற திருவாட்டி பூபேந்திரன், பெரிய கனவுகளோடு செப்டம்பர் 2018ல் கணவர் திரு பழனியப்பனின் துணையோடு ஜூரோங் ஈஸ்ட்டில் ‘விஷன் எக்ஸ்ச்சேஞ்ச்’ கட்டடத்தில் அஞ்சனா உணவகத்தை முதன்முதலில் தொடங்கினார். அந்த முயற்சியின் பலனே இப்புதிய கிளை.
அஞ்சனா உணவகத்தின் புதிய கிளை 6 பேட்டரி சாலை, #01-04, கேப்பிட்டலேண்ட் கட்டடம், சிங்கப்பூர் 049909 என்ற முகவரியில் உள்ளது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
ஜூரோங் ஈஸ்ட் கிளையின் முகவரி 2 வெஞ்சர் ட்ரைவ், #01-43/44, ‘விஷன் எக்ஸ்ச்சேஞ்ச்’, சிங்கப்பூர் 608526. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மேல்விவரங்களுக்கு www.anjanakitchen.com தளத்தை நாடலாம்.