சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கு உதவிய தொழில்முனைவர்

‘கோர்னெர்ஸ்டோன்’ மதுபான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கிளிண்டன் ஆங், ஆண்டுதோறும் 50 அறப்பணி அமைப்புகளுக்குத் தவறாமல் உதவி வருகிறார்

அந்த அமைப்புகளில் ஒன்று சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை. பத்தாண்டுகளாக அவற்றுக்கு நிதியுதவி வழங்கிவரும் திரு ஆங், “சிறிய அமைப்புகளுக்கு என்னால் முடிந்த உதவி செய்வதில் மனநிறைவு அடைகிறேன். அவற்றுக்குத்தான் அதிக உதவி தேவைப்படுகிறது,” என்றார்.

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை தலைவரான திரு கோபால் வரதராஜுவை தொழில் கட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் எதேச்சையாகச் சந்தித்த திரு ஆங், 50, “தமது அறக்கட்டளையைப் பற்றி கோபால் என்னிடம் பகிர்ந்துகொண்டபோது எனக்கு அதன் நோக்கம் மீது நல்ல எண்ணம் ஏற்பட்டது. சிறந்த நோக்கமுடையவர்களை நம்மால் உடனே கண்டுபிடிக்க முடியும்,” என்றார்.

அண்மையில் தனது மதுபான விற்பனைக் கிடங்கில் ஒரு சிறிய அறப்பணி நிகழ்ச்சியை திரு ஆங் நடத்தினார். அதில் அவரது பங்காக சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கு $5,200 வழங்கினார்.

சிறிய தொகையாக இருந்தாலும் அதன் மூலம் பயன்பெறும் பயனாளிகள் பலர் உள்ளதாக அவர் சொன்னார்.

இவர் அண்மையில் நடத்திய அறப்பணி நிகழ்வில் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

திரு ஆங்கின் உதவி பற்றிக் கருத்துரைத்த திரு கோபால், “பல்லாண்டு காலமாக கிளிண்டன் எங்களுக்கு உதவி வருகிறார். அவர் முதலில் எங்கள் அறக்கட்டளையின் அறப்பணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“அன்றிலிருந்து இன்று வரை அவரது சேவை மனப்பான்மை குறையவில்லை. எங்களது நிகழ்ச்சிகளுக்கும் கிளிண்டன் இலவசமாக மதுபானம் வழங்கி ஆதரிப்பார். இத்தகைய நட்பு மற்ற அமைப்புகளுக்கும் கிடைக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

நிறுவன, சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் கிளிண்டன் அந்த ஆக்கபூர்வமான செயலில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

நிகழ்ச்சியை ஆதரிக்க வந்தவர்களில் ஒருவரான திரு கல்யாண் வெங்கடேஷ், 56, “எனக்கு இதற்கு முன்பு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை பற்றி தெரியாது. நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன். 56 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு கிளிண்டன் போன்றவர்கள் துணைநிற்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பிறருக்கு உதவ எனக்கும் ஊக்கம் கிடைத்துள்ளது,” என்றார்.

மூன்றாவது தலைமுறையாக இத்தொழிலை நடத்திவரும் திரு ஆங், மேற்படிப்புக்காக அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திற்குச் சென்றார்.

இளநிலைப் பட்டம் பெற்றதும் சிறிது காலம் நியூயார்க்கில் பணிபுரிந்த இவர், தம் தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் திரும்பினார்.

சிறுவயதிலிருந்தே குடும்பத் தொழிலின் நுணுக்கங்களை இவர் அறிந்துள்ளார்.

வீட்டின் ஆக இளைய மகனான இவருக்கு அத்தொழிலை வழிநடத்தும் பொறுப்பு வந்தபோது அதை முழுமனதோடு ஏற்றார். இன்று சிங்கப்பூர் உட்பட 29 நாடுகளில் இவரது தொழில் விரிவாக்கம் கண்டுள்ளது.

அடுத்து, மேலும் பல அமைப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற துடிப்பு தனக்குள் இருப்பதாகக் கூறும் திரு ஆங், “அர்த்தமுள்ள வகையில் சேவையாற்றுவதில் நான் இன்பம் அடைகிறேன்,” என்றார்.

இன்னும் அதிக அமைப்புகளுக்கு உதவும் ஆற்றலைப் பெற்றால் அதைச் செய்ய தாம் விரும்புவதாக இவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!