நன்றி நவிலும் நன்னாள்; நம்பிக்கை பிறக்கும் பொன்னாள்

சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இளம் வயதில் சென்னையின் அசோக் நகரில் சிறுவனாகப் பொங்கல் கொண்டாடிய நினைவுகள் திரு எத்திராஜ் அரவிந்தனை இன்றும் முகம் மலர வைக்கின்றன.

பொங்கலுக்கு முந்திய நாள் போகி பண்டிகையின்போது மற்ற சிறுவர்களுடன் தான் வீதிகளைச் சுற்றிவந்து கொண்டாடியதை நினைவுகூர்ந்தார் திரு அரவிந்தன், 53.

“போகிக்காக நாங்கள் மேளம் தட்டி பாட்டுப் பாடுவோம். சாலையிலேயே பழைய பொருள்களைக் குவித்து அதனை எரிப்பதற்குத் தயாராவோம். பொங்கல் தினத்தன்று பக்கத்து வீட்டார் எங்களுக்குப் பசும்பால் தருவர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கும்,” என்று அவர் கூறினார்.

வீட்டுக்குப் பின்னால் இருந்த கிணற்றுக்கு அருகே தம் தாயார், கற்களாலும் விறகுகளாலும் ஆன அடுப்பைப் பற்றவைத்து கிழக்குத் திசையைப் பார்த்து பொங்கல் சமைத்ததை நினைவுகூர்ந்தார். தாம் வளர்ந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் மாடுகள் வளர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். உறவினர்கள், அண்டைவீட்டார் என அனைவரையும் வேறுபாடின்றி உற்றாராகக் கருதிய பண்பாடு அப்போது நிலவியதாக திரு அரவிந்தன் கூறினார்.

1997ல் சிங்கப்பூருக்குத் தனியாக வந்து பணிபுரிந்த திரு அரவிந்தன், பின்னர் சென்னையைச் சேர்ந்த திருவாட்டி சுமித்திராவைத் திருமணம் செய்து இங்கேயே குடும்பமாகக் குடியேறினார். வேலை செய்து கொண்டு தொடர்ந்து படித்துப் பதவி உயர்வு பெற்றார். முன்னேற்றப் பயணத்தில் செல்லும் தம் குடும்பத்திற்கு, இந்தப் பொங்கல் புதிய தொடக்கங்கள் தருவதைத் தாம் காண்பதாக புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டில் வசிக்கும் திரு அரவிந்தன் கூறினார்.

திரு அரவிந்தனின் மகன் சித்தார்த், 21, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு தரவுத்துறையில் பயில்கிறார். அவர், “தேசிய சேவை முடித்து ஈராண்டுகள் ஆன பின்பு மீண்டும் படிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆயினும் நன்றியுணர்வுடன் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சித்தார்த்தைப் போல அவரின் தங்கை கீர்த்தனாஸ்ரீக்கும் கல்வியில் ஒரு புதிய தொடக்கம். தமிழ் ஆரம்பக்கல்விப் பட்டயத்தைப் பயின்றுவரும் கீர்த்தனாஸ்ரீ, 17, பொங்கல் பற்றி விளக்கும் முப்பரிமாணப் பெட்டி ஒன்றைச் செய்ததாகவும் பகிர்ந்தார்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கலைப் பற்றி பிற இனத்தவர் அதிகம் கேள்விப்படாத நிலை மாறி, பொங்கல் ஒளியூட்டு, சமூக மன்றக் கொண்டாட்டங்கள் போன்றவற்றால் அப்பண்டிகை பற்றிய விழிப்புணர்வு சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது என்றார் அரவிந்தன்.

தமிழர்களால் போற்றப்படும் ஒரு பண்பு, நன்றியுணர்வு. அதனால், பொங்கல் திருநாளின்போது தமிழர்களின் பண்புகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு நினைவூட்டுவதாக திரு அரவிந்தனும் அவரின் மனைவியும் கூறினர்.

“பொங்கல் சமைத்த பிறகு பொங்கல் பானையை நம் பூசை அறையில் வைத்து திருமுறைகளை ஓதி வழிபடுவோம். பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒளிரும் சூரியனுக்கும் ஐம்பூதங்களை இயக்கும் இறைவனுக்கும் நன்றி கூறுவோம்,” என்றார் திரு அரவிந்தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!