காலஞ்சென்ற கலைஞரைச் சிறப்பித்த ‘ரெ சோமா’

சிங்கப்பூர் நாடகத்துறைக்கு பெரும் பங்களித்தவர்களில் காலஞ்சென்ற ரெ சோமசுந்தரமும் ஒருவர்..

அவரது தன் வரலாற்றின் முதல் பாகத்தை, உள்ளூர்த் தமிழ் நாடகக் குழு ‘அகம் தியேட்டர் லேப்’ 2021ஆம் ஆண்டில் மேடையேற்றியது. அதன் இரண்டாவது பாகம் அண்மையில் மூன்று நாள்களுக்கு மேடையேறியது.

தமிழகத்தில் கும்மங்குடி எனும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் திரு சோமசுந்தரம்.

இளவயதிலிருந்தே தெருக்கூத்துகளைப் பார்த்து வளர்ந்த அவரின் மனத்தில் நாடகங்கள் பசுமரத்தாணி போல் பதிந்தன.

குடும்பத்தில் மூத்த பிள்ளை. பணம் ஈட்டுவதற்காக வெளிநாட்டில் வேலை பார்த்த தந்தை. அதேநேரத்தில் வீட்டில் பண நெருக்கடி.

மகன் வழக்கறிஞர் ஆக வேண்டுமென்ற கனவில் சோமசுந்தரத்தின் பெற்றோர் அவரைச் சிறுவயதிலேயே சிங்கப்பூருக்குப் படிக்க அனுப்பினர்.

சிங்கப்பூரில் வந்தபிறகும் திரு சோமசுந்தரத்திற்கு நாடகக் கலை மீதிருந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை.

சிங்கப்பூரில் பல சவால்களைக் கடந்து, அவர் நட்சத்திரமாக உருவானதை அகம் தியேட்டர் லேப், ‘ரெ சோமா’ இரண்டாவது பாகத்தில் வெளிக்கொணர்ந்தது.

திரு சோமசுந்தரத்துடன் அவரது வாழ்க்கையில் பயணிப்பது போன்ற உணர்வு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது.

இளவயது சோமசுந்தரமாக நடித்த ரகு ஸ்ரீராம், நாடக உலகிற்குப் புதியவர். நாடகத்தின் முதல் காட்சி, சிறுவனான சோமசுந்தரம் தெருக்கூத்தை மெய்ம்மறந்து பார்த்ததில் தொடங்கியது.

தெருக்கூத்தில் கட்டியக்காரனாக தொலைக்காட்சிக் கலைஞர் உதய சௌந்தரி நடித்திருந்தார்.

அவருடன் துரியோதனனாகக் கம்பீரமாக மேடையேறிய உள்ளூர் கலைஞர் கார்த்திகேயன் சோமசுந்தரம், பார்வையாளர் கண்முன் தன் தந்தையின் உருவைக் கொண்டு வந்தார்.

சிங்கப்பூரில் சோமசுந்தரம் காதலித்த பெண் கதாபாத்திரத்தில் உதயாவின் தங்கை மாலினி நடித்திருந்தார். ஆனால், இந்தியாவில் பெற்றோர் பார்த்த பெண்ணை கரம்பிடிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

சோமசுந்தரம் தற்செயலாக முன்னாள் காதலியை ஒரு கோயிலில் சந்தித்த காட்சியில் கார்த்திகேயனும் மாலினியும் பார்வையாளர் சிலரின் கண்களில் நீர் வழிந்தோட வைத்தனர்.

சோமசுந்தரத்திற்கு நல்ல வேலைகள் கிட்டியபோதும் அவர் நாடகத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவருக்குப் பேராதரவாக இருந்தவர் அவருடைய மனைவி சரோஜா.

சரோஜாவாக நடித்திருந்த உதயா, கணவன் - மனைவிக்கு இடையிலான உறவைத் தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தினார்.

திரு சோமசுந்தரம் சிங்கப்பூர்த் தமிழ் வானொலியில் பணியாற்றத் தொடங்கும் காட்சியுடன் நாடகம் நிறைவடைந்தது.

பிறகு, சோமசுந்தரத்தின் பழைய புகைப்படங்கள் காட்டப்பட்டன.

“இந்த நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் என் அப்பாவைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். இந்த நாடகம் எனக்கு ஓர் உணர்வுபூர்வமான அனுபவத்தைத் தந்தது,” என்று கார்த்திகேயன் சொன்னார்.

“ரெ சோமா நாடகத்தில் தெருக்கூத்து அம்சங்களுடன் நகைச்சுவை கலந்த ஒருவரின் வரலாற்றைக் கூறியுள்ளோம். இரண்டரை மணி நேரத்தில் பார்வையாளர்கள் அனைத்து உணர்ச்சிகளையும் உணரமுடிந்தது,” என்று அகம் தியேட்டர் லேப் நிறுவனர் சுப்ரமணியன் கணேஷ் கூறினார்.

“எனக்கு திரு ரெ.சோமசுந்தரத்தின் வாழ்க்கை குறித்து அவ்வளவு தெரியாது. நாடகத்தைப் பார்த்த பிறகு அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களைப் புரிந்துகொண்டேன்,” என்றார் பார்வையாளர்களில் ஒருவரான அனில் ரவீந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!