உடன்பிறப்புகளின் புதுமையான ‘டோனட்ஸு’

சிங்கப்பூரில் பலரும் விரும்பி உண்ணும் ஒன்று ‘டோனட்’. இந்த ‘டோனட்’ வியாபாரத்தில் இறங்கியதுடன் புதுப் பாணியில் டோனட்டுகளைத் தயாரித்து விற்றும் வருகின்றனர் உடன்பிறப்புகளான 29 வயது ஹஃபீல் அஹமதும் 21 வயது ஃபஹிமா ஃபார்வினும்.

நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள ‘கெர்ப்சைடு கிராஃப்டெர்ஸ்’ வளாகத்தினுள் நுழைந்தவுடன் இளஞ்சிவப்பு வண்ணத்தில் ‘டோனட்ஸு’ என்று எழுதப்பட்ட பலகையுடன் கூடிய கடை நம்மை வரவேற்கும்.

உடன்பிறப்புகள் ஹஃபீல் அஹமது, ஃபஹிமா ஃபார்வின். படம்: அனுஷா செல்வமணி

பொதுவாக, மாவால் பிசையப்பட்ட பிறகு டோனட்டுகள் எண்ணெய்யில் பொரிக்கப்படும். ஆனால், ‘டோனட்ஸு’ கடையில் பிசைந்த பின்னர் வேகவைத்த மாவில் டோனட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர், அவை அடுப்பிலிட்டுச் சுடப்படுகின்றன.

இங்கு விற்கப்படும் டோனட்டுகள், ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கே உரிய செய்முறையைத் தழுவித் தயாரிக்கப்படுகின்றன.

‘டோனட்ஸு’ விற்கும் விதவிதமான டோனட்டுகள். படம்: அனுஷா செல்வமணி

தனித்து நிற்கும் இந்த டோனட்டுகளை ஹஃபீலும் ஃபஹிமாவும் கடந்த 2023 நவம்பர் மாதத்திலிருந்து விற்றுவருகின்றனர்.

வழக்கமான சுவைகளைத் தவிர டோனட்ஸுவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ப புத்துணர்ச்சியூட்டும் பழச்சுவைகளிலும் டோனட்டுகள் கிடைக்கும்.

‘கெர்ப்சைடு கிராஃப்டெர்ஸ்’ வளாகத்தில் வாடகைக்கு ஓர் இடத்தை எடுத்து, தொழில் முனைவர்கள் தங்களது வியாபாரத்தை நடத்தலாம். உணவு, அணிகலன்கள் எனப் பலவிதமான கடைகளை வாடிக்கையாளர்கள் இவ்விடத்தில் எதிர்பார்க்கலாம்.

“கடைத்தொகுதியில் வாடகைக்குக் கடை நடத்தினால் வழக்கமான கூட்டம்தான் வரும். ஆனால், இந்த இடத்தில் அதிக இளையர்களைப் பார்க்க முடிகிறது. புதிது புதிதாகக் கடைகள் இந்த வளாகத்தில் அமைக்கப்படுவதால் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை எங்களால் கவரவும் முடியும்,” என்றார் ஹஃபீல்.

டோனட்ஸு தொடக்கத்தில் ஹஃபீலின் நண்பருடைய மனைவியால் தொடங்கப்பட்டது. கடையின் கிளையை மற்றோர் இடத்தில் நடத்த, தன் நண்பர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்ததையடுத்து, ஹஃபீல் அந்த வாய்ப்பைக் கைப்பற்றினார். டோனட்ஸு கடையின் கிளையை மற்றோர் இடத்தில் நடத்துவதற்கான உரிமத்தை ஹஃபீல் பெற்றார்.

அதே நேரத்தில் தன் தந்தையின் போக்குவரத்துத் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் ஹஃபீலுக்கு அதிக உதவி தேவைப்பட்டது. தங்கை ஃபஹிமாவுடன் ஆறு மாதங்கள் கலந்தாலோசித்த பிறகு இருவரும் உணவுத் தொழிலில் இறங்க முடிவெடுத்தனர்.

“சிறுவயதிலிருந்தே சுயதொழில் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். உணவு பானத் துறையில் பணிபுரிந்த அனுபவம் எனக்கில்லை. இருந்தாலும் எதுவும் சாத்தியம் என்ற மனப்பான்மைதான் என்னை இவ்வளவு தொலைவு கொண்டுவந்துள்ளது,” என்று ஹஃபீல் சொன்னார்.

நண்பனின் கடைக்கு அப்போது பகுதிநேர ஊழியர்கள் தேவைப்பட்டதால் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள ஃபஹிமா அங்கு வேலைக்குச் சேர்ந்தார்.

வேலை அனுபவம் ஃபஹிமாவுக்குப் பேருதவியாக இருந்தது. டோனட்டுகள் தயாரிப்பதிலிருந்து அதற்குச் சுவையூட்டுவது வரை அனைத்தையும் அவர் கரைத்துக் குடித்தார்.

ஆரம்பக்கல்வியில் பட்டயம் பெற்றுள்ள ஃபஹிமா, மேற்படிப்பு படிக்க விரும்பினாலும் அண்ணனுடன் இணைந்து தொழில் நடத்துவதன் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளார்.

“என் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாவிடினும் கடைப் பொறுப்புகளை என்னால் கையாள முடிவதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்று அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!