தமிழ்ப் புத்தாண்டை வரவேற்ற ‘சித்திரை வானவில் 2024’

சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.

800க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வண்ணமயமான பாரம்பரிய உடைகளில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஜூரோங் குழுத்தொகுதி மற்றும் புக்கிட் பாத்தோக், யூஹுவா தனித்தொகுதிகளின் அடித்தள ஆலோசகர்கள் வழிநடத்திய ஒளியூட்டுடன் கொண்டாட்டம் துவங்கியது. அடித்தள ஆலோசகர்களை வரவேற்க, ‘பிரபஞ்ச ஆற்றல் குடில் சிங்கப்பூர்’ குழு பறை இசை எழுப்பினர்.

நெறியாளராக உள்ளூர்க் கலைஞர் சஜினி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக, ஜூரோங் செண்ட்ரல் தன்னார்வக் குழுவின் மூத்தோர், யோகா பயிற்சி செய்து ஆரோக்கியத்தை வலியுறுத்தினர். கிளமெண்டி சமூக மன்ற தன்னார்வக் குழுவின் பாரம்பரிய ஆட்டமும் மக்களைக் கவர்ந்தது.

யோகா பயிற்சி செய்து காட்டிய ஜூரோங் செண்ட்ரல் தன்னார்வக் குழுவின் மூத்தோருடன் அடித்தள ஆலோசகர்கள். படம்: ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள்

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளில் சிறுவர்களின் நாடகம் இடம்பெற்றது.

பாலர் பள்ளி முதல் வகுப்பு தொடங்கி தொடக்கநிலை மூன்று வரையிலான மாணவர்களுக்குக் கதைசொல்லுதல், இந்தியர்-மற்ற இனத்தவர் இணைந்து ரங்கோலி வரைதல், தமிழ் எழுத்துகள் கொண்டு தேநீர் ‘கோஸ்டர்’கள் தயாரித்தல், ‘டமியா’ உந்துவண்டி விளையாட்டு, பலூன் வடிவமைத்தல் எனப் பல நடவடிக்கைகள் நடைபெற்றன.

மணிமாறன் நடனக் குழுவினர், பாடகர்கள் சுபாஷினி, குணா ஆகியோரும் தங்களின் படைப்புகளின்வழி மக்களை உற்சாகப்படுத்தினர்.

சிண்டா, யுவபாரதிப் பள்ளி, சுகாதார மேம்பாட்டு வாரியம், பிரபஞ்ச ஆற்றல் குடில் சிங்கப்பூர் ஆகியவை சாவடிகள்மூலம் பொதுமக்களைச் சென்றடைந்தன.

இந்நிகழ்ச்சி சமூகத்தை இணைத்ததோடு தமிழ் மரபை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!