சிங்கப்பூரில் மீண்டும் நடைபெறுகிறது ‘காஸ்ட்ரோபீட்ஸ்’.
பேஃபிரண்ட்டில் ஜூன் 23 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை காஸ்ட்ரோபீட்ஸ் 2024 நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இவ்வாண்டு மூன்றாவது பதிப்பாக இடம்பெறும் இந்நிகழ்ச்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ‘கோகோ கோலா’ நிறுவனமும் அடங்கும்.
காஸ்ட்ரோபீட்ஸ், ‘மக்களின் விழா’ நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட உணவுக் கடைகளும், பல விளையாட்டுச் சாவடிகளும் உள்ளன. பலருக்கும் விருப்பமான உணவு வகைகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா, அமெரிக்கா, மெக்சிகோ, கொரியா போன்ற பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற உணவு வகைகளும் பலவகை பானங்களும் இங்கு விற்கப்படும்.
கோகோ கோலா ‘எ ரெசிபி ஃபார் மேஜிக்’ இன் ஒரு பகுதியாக இவ்வாண்டின் கோகோ கோலா உணவு விழா நடைபெறுகிறது. கோகோ கோலா சாவடியில் பல விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான ‘ராக்-பேப்பர்-சிஸர்ஸ்’ விளையாட்டு, கோக் புகைப்படச் சாவடியில் நீடித்த நினைவுகளை உருவாக்குவது, இலவச கோகோ கோலா பானம் போன்ற பல ஆர்வமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோகோ கோலா இந்த நிகழ்ச்சியில், ‘ஸ்வெப்பஸ்’, ‘ஃபுஸ் டீ’ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. பங்கேற்பாளர்களுக்குக் கூடுதல் புகைப்பட வாய்ப்புகளும் கோல்ஃப் சவால் போன்ற வேடிக்கையான விளையாட்டுகளும் காத்திருக்கின்றன. அங்கு வழங்கப்படும் ‘மிஷன் கார்டு’ மூலம் பலவிதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோகோ கோலா நிறுவனத்தின் சிங்கப்பூர், மலேசியாவிற்கான முன்னணி விளம்பரப் பிரிவு இயக்குநர் ருஸ்டம் கபைடுலின், “ஒரு மாத கால உணவு விழாவிற்கு காஸ்ட்ரோபீட்ஸுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
“பிளாஸ்டிக் போத்தல், தகர கேன்களுக்கான மறுசுழற்சித் தொட்டிகளுடன் ‘என்னை மறுசுழற்சி செய்யுங்கள்!’ என்ற சிறப்பு வசதியையும் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,’’ என்றார்.
மேல்விவரங்களுக்கு காஸ்ட்ரோபீட்ஸ் இணையத்தளத்தை நாடலாம்.

