பள்ளிப் பருவத்தில் தமிழ் வகுப்புகளைத் தவற விட்டவர்களுக்குத் தமிழ் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்.
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் இவ்வகுப்பில் தமிழ் மொழியைச் சரளமாகப் பேச, எழுத, படிக்க கற்பிக்கப்படும்.
எண் 20 ரோவல் சாலையிலுள்ள சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் வளாகத்தில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறவுள்ளன.
ஜூலையில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கவுள்ள இவ்வகுப்புகள், திங்கட்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
இதற்குமுன் நடத்தப்பட்ட வகுப்புகளில் பங்கேற்றோருக்கும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் உறுப்பினர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகுப்புகளுக்குப் பதிவுசெய்யத் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
மு.அ.மசூது - 9795 8142 ஜலாலுத்தின் 9678 7786
பதிவுசெய்யக் கடைசி நாள் ஜூன் 30ஆம் தேதி.

