வாழ்வியல் இலக்கியப் பொழில் 108வது சந்திப்பு

வாழ்வியல் இலக்கியப் பொழில் 108வது சந்திப்பு

fallback-0

09 Oct 2026 - 8:52 pm

1 mins read

இலக்கியத் தொண்டாற்றிவரும் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பு 2026 அக்டோபர் மாதத்துடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.

அவ்வமைப்பின் 108வது மாதாந்தர நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்டோபர் 11) பிற்பகல் 3 மணிக்கு 3, ஹவ்காங் அவென்யூ 6 என்ற முகவரியில் அமைந்துள்ள பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெறவுள்ளது.

அந்நிகழ்ச்சியில் ‘திணை இலக்கியத் திரட்டு’ என்னும் சிறப்பு அங்கம் இடம்பெறவுள்ளது. அதில் ஒன்பது பேர் பங்கெடுத்து, ஆளுக்கு 12 இலக்கிய வரிகளை நுணுக்கமாக ஆராய்வர்.

திருச்சியிலிருந்து முனைவர் கரு. கலையரசி ‘சங்ககால மகளிர்’ எனும் தலைப்பில் சிறப்புரையும், திருவாட்டி ஹேமா பிரபாகரன் ‘அகிம்சை’ என்னும் தலைப்பில் சிற்றுரையும், பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி ‘முகநிலை’ என்னும் தலைப்பில் அறிமுகவுரையும் ஆற்றுவர். வழக்கமான சிறார் படைப்புகளும் இடம்பெறும்.

மேல்விவரங்களுக்கு: எல்ல. கிருஷ்ணமூர்த்தி - 9228 8544