இளையர்களுக்கான ‘ஸ்திரீட் டான்ஸ்’

1 mins read
1f2a53a7-964e-47bc-82b4-1b7d716e9532
ஸ்திரீட் டான்ஸ்@நார்த் வெஸ்ட் நிகழ்ச்சியில் இளையர்கள் நடனத் திறனை வெளிப்படுத்தினர். - படங்கள்: வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்
multi-img1 of 2

வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்திரீட் டான்ஸ்@நார்த் வெஸ்ட் (Street Dance @ North West) நிகழ்ச்சி முதன்முறையாக சனிக்கிழமை (மார்ச் 8) நடந்தது. 

புக்கிட் பாஞ்சாங் பிளாசா ஏட்ரியத்தில் நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளையர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒற்றையர் பொதுப் பிரிவில் 65 பேரும், 12 முதல் 35 வயதுக்கு உட்பட்ட  இரட்டையர் பிரிவில் 27 அணிகளும் போட்டியிட்டனர். 

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனது ஆதரவையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார் 26 வயது கிரிஷ் ரவி. 

ஹிப் ஹாப் (Hip Hop), பாப்பிங் (Popping), லாக்கிங் (Locking), பிரேக்கிங் (Breaking) போன்ற நடன பாணிகளில் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இசையின் துடிப்பிற்கும் தாளத்திற்கும் ஏற்றவாறு போட்டியாளர்கள் நடனமாட வேண்டும். 

இது போட்டியாளர்களின் உடனுக்குடன் சிந்திக்கும் ஆற்றல், திறமை, தனித்தன்மை போன்றவற்றைச் சோதிக்கிறது. 

இளையர்கள் தங்கள் திறமைகளின் மூலம் சமூகத்திற்குப் பங்காற்றவும் சக நடன ஆர்வலர்களைச் சந்திக்கவும் நிகழ்ச்சி வாய்ப்பளித்துள்ளதாக வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்