சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது

1 mins read
71a6a5e8-c651-4d09-9d2b-9f225b7eb58d
சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருதுக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். - படம்: கவிமாலை இணையப்பக்கம்

சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவித்து தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. 

விருதுக்கான விதிமுறைகள்:  * 2023, 2024ஆம் ஆண்டுகளில் முதல் பதிப்பினை வெளியீடு செய்த கவிதை நூலாக இருக்க வேண்டும்.  * சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூரில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து வேலை அனுமதி அட்டையில் பணியில் இருப்பவர்கள் மட்டுமே தகுதிபெறுவர்.    * கவிதைகள் எந்தப் பாவினத்தையோ வகையினையோ சேர்ந்தவையாக இருக்கலாம்.   * கவிஞர்கள் தங்கள் கவிதைப் படைப்பை (4 படிகள்) ஞாயிற்றுக்கிழமை 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.   இந்தப் போட்டிக்கு மூன்று நடுவர்கள் நியமிக்கப்பட்டு பரிசுக்குரிய சிறந்த நூல் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.   பரிசுபெறும் நூலுக்கான தங்கப்பதக்க விருது கவிமாலை நிகழ்வில் வழங்கப்படும்.   இப்போட்டியில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைப்பில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும். https://forms.gle/KnVxQMcdGWTCBGeU8 கவிதை நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : Blk 9 #03-532, Bedok South Ave 2, Singapore 460009.

குறிப்புச் சொற்கள்