தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ‘அன்னையர் தினம்’

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ‘அன்னையர் தினம்’

படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம்

08 May 2026 - 5:58 am

1 mins read

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் கடந்த பத்தாண்டுகளாகச் சிறந்த அன்னையரைப் போற்றி அவர்களுக்கு ‘அன்னையர் திலகம்’ விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திவருகிறது. 

சென்ற ஆண்டிலிருந்து தமிழ், மலாய், சீன இனத்தைச் சேர்ந்த அன்னையரைப் போற்றி அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியத்தில் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது கழகம். 

நிகழ்ச்சியைப் பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்று நடத்துகிறார்கள். அன்னையரை அழைத்துவரும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். 

அத்துடன், நிகழ்ச்சிக்கு வருகிறவர்களுக்கு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் முந்தைய நூல்கள் இலவசமாகத் தரப்படும். வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளுடன் விளையாட்டு அங்கமும் உண்டு. 

நிகழ்ச்சி முடிந்து இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

குறிப்புச் சொற்கள்