தொழில்நுட்பத் துணுக்குகள் [14/10/2026]

தொழில்நுட்பத் துணுக்குகள் [14/10/2026]

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: நெட்ஃபிளிக்ஸ்

15 Oct 2026 - 6:45 am

2 mins read

ஸ்பேஸ்எக்ஸ் புதிய திட்டம்

விண்வெளித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மூலம் தனது செயல்பாடுகளைத் தீவிரமாக்க என்விடியாவின் ஏஐ சில்லுகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலோன் மஸ்க் சர்ச்சை

முன்னணித் தொழிலதிபரும் செல்வந்தருமான இலோன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியாக அறிமுகம் செய்வதில் தடைகளை எதிர்நோக்குவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது. செயற்கைக்கோள் வழியாக இணையச் சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை அறிந்த பிறகே உரிமங்கள் வழங்கப்படும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

ஐஃபோன் 18 புரோ மேக்ஸில் சிக்கல்

ஐஃபோன் 18 புரோ மேக்ஸ் கைப்பேசிகளில் ஏடி&டி (AT&T) சிம் அட்டைகளைப் பயன்படுத்தும்போது சில நேரங்களில் சேவைகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் தீவிரமான கோளாறு இருப்பதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தச் சிக்கலை மென்பொருள் மூலம் சரிசெய்ய முடியாது என்றும் இது ஒரு வன்பொருள் பிரச்சினை என்பதால் கைப்பேசியை முற்றிலும் புதியதாக மாற்றுவது மட்டுமே அதற்குத் தீர்வு என்றும் ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது.

சாம்சுங்கிற்கு நல்ல லாபம்

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுள்ள நல்ல வளர்ச்சியால், சாம்சுங் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்நிறுவனம் தன் புதிய முதன்மைத் தயாரிப்புகளான ‘கேலக்ஸி டேப் எஸ்12+’ ‘கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா’ ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆட்குறைப்பு செய்யும் நெட்ஃபிளிக்ஸ்

விற்பனை வளர்ச்சி மந்தமடைந்துள்ளதால் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் தனது ஊழியர்களில் 5 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட 800 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் நடைபெறும் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஏஐசெயற்கை நுண்ணறிவுநெட்ஃபிளிக்ஸ்ஐஃபோன்

தொடர்புடைய செய்திகள்