தொழில்நுட்பத் துணுக்குகள் [08-10-2026]

தொழில்நுட்பத் துணுக்குகள் [08-10-2026]

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

08 Oct 2026 - 7:31 am

2 mins read

அமெரிக்காவின் ‘ஏஐ’ பாதுகாப்புக் கொள்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதற்கான தனி அமைப்பை உருவாக்கி ‘ஏஐ’ கொள்கை, பொருளியல், பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் அது கவனம் செலுத்துகிறது.

‘ஓப்பன்ஏஐ’யின் GPT-6.1 Sol

செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் தொடர்ந்து முன்னிலை வகிக்க வேண்டும் என்பதில் ‘ஓப்பன்ஏஐ’ தெளிவாக உள்ளது. சில நாள்களுக்கு முன்னர் அது GPT-6.1 Sol என்னும் கட்டமைப்பை வெளியிட்டது. அண்மையில் 'ஓப்பன்ஏஐ’ தன் ‘ஆஸ்டிரா’ கட்டமைப்பு வெளியீட்டை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்டப் பாய்ச்சலில் கூகல்

கூகல் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவுச் சந்தையில் பலத்த போட்டி கொடுத்து வருகிறது. கூகலின் ‘ஜெமினை ஏஐ’ மாதிரியில் ‘ஜெமினை 4 ஆர்கன்’ உருவாக்கப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏதுமிருந்தால் அது களத்தில் இறங்கும்.

ஆறு மில்லியன் ‘ஐஃபோன் டுவோ’

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஏறத்தாழ 6 மில்லியன் ‘ஐஃபோன் டுவோ’ மடக்குக் கைப்பேசிகளை விற்பனை செய்யும் என கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. ஆப்பிளின் முதலாவது மடக்குக் கைப்பேசியான ‘ஐஃபோன் டுவோ’, அக்டோபர் 23ஆம் தேதி 1,999 அமெரிக்க டாலர் (S$2,554) விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

திரையில் கவனம் செலுத்தும் சாம்சுங்

தனது மடக்குக் கைப்பேசிகளின் திரையில் கீறல்கள் விழுவதைத் தடுப்பதில் சாம்சுங் நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. திரையை 500,000 முறைக்குமேல் மூடினாலும் அதில் கீறல்கள் விழாமலிருக்கத் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

‘ஏஐ’ பயன்பாட்டால் பொருளியல் உயர்வு

சிங்கப்பூரில் அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ‘ஏஐ’ தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாட்டின் மின்னிலக்கப் பொருளியல் $144 பில்லியனுக்குமேல் உயர்ந்துள்ளது.

சீனாவுக்குப் போட்டி

அமெரிக்காவின் ‘ரிஃப்லெக்‌ஷன் ஏஐ’ (Reflection AI) நிறுவனம் சீனத் தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாக ‘பீம்’ (Beam) என்ற புதிய திறந்தவெளிச் செயற்கை நுண்ணறிவு மாதிரியை வெளியிட்டுள்ளது. வர்த்தகம், மென்பொருள் எழுதுவது, ‘ஏஐ’ முகவர் உள்ளிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யும் வகையில் ‘பீம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்
தகவல் தொழில்நுட்பம்செயற்கை நுண்ணறிவுஏஐ

தொடர்புடைய செய்திகள்