சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழாவை வரும் செப்டம்பர் 18ஆம் தேதி, இரவு 7 மணிக்கு 100, விக்டோரியா சாலையில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ‘தி பாட்’ அரங்கில் நடத்த உள்ளது.
அவ்விழாவில் புதுமைத்தேனி மா. அன்பழகன் எழுதிய ‘செம்பியன் திருமேனி’ என்ற வரலாற்றுப் புதினம் குறித்த நூல் ஆய்வு நடைபெற உள்ளது. விழாவில், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். தமிழறிஞரும் முனைவருமான திரு சுப. திண்ணப்பன் சிறப்புரை ஆற்றுவார்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ‘செம்பியன் திருமேனி’ நூல் குறித்த ஆய்வுரையை கவிஞர் திருமிகு. சந்திரசேகரன் மோகனப்பிரியா வழங்குகிறார்.
தமிழ் இலக்கியம், வரலாறு, சமூகச் சிந்தனைகளுடன் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அன்புடன் அழைக்கிறது.
தொடர்புக்கு, செயலாளர் தமிழ்ச்செல்வியை 90622301 என்ற எண்ணில் அழைக்கலாம்.
அனைவருக்கும் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

