தமிழ் இலக்கிய உரைகள், சிறப்பு அங்கங்களுடன் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் 98வது மாதாந்தரச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
எண் 3 ஹவ்காங் அவென்யூ 6ல் உள்ள பொங்கோல் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
உதவிப் பேராசிரியர் கவிஞர் பிரியாவின் ‘தமிழரின் மறமும் அறமும்-புறநானூறு’, முனைவர் வி.புவனேஸ்வரி படைக்கும் ‘பழமொழி நானூற்றில் உளவியல்’ ஆகிய இரண்டும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.
‘முழவு’ என்னும் தலைப்பில் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தியுடைய அறிமுகவுரையுடன் வழக்கமான இலக்கியச் சிற்றுரைகள், தாய்-சேய் இணைந்து படைக்கும் ‘வேரும் விழுதும்’ போன்ற அங்கங்களும் இடம்பெறவுள்ளன.
மேல்விவரங்களுக்கு 9228 8544 என்ற எண்ணை அழைக்கலாம்.

