ஸ்ரீ சிவ கிரு‌ஷ்ணா கோயிலில் துடிப்பான மூப்படைதல் நிகழ்ச்சி

ஸ்ரீ சிவ கிரு‌ஷ்ணா கோயிலில் துடிப்பான மூப்படைதல் நிகழ்ச்சி

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 9:46 am

2 mins read

புரோஜெக்ட் ஸ்மைல் நன்கொடை அமைப்பு, அத்தகைய மற்றோர் அமைப்பான ஹாவ் ரென் ஹாவ் ‌ஷியுடன் இணைந்து உட்லண்ட்சில் உள்ள ஸ்ரீ சிவ கிரு‌ஷ்ணா கோயிலில் துடிப்பான மூப்படைதல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சி, சிறுபான்மை இனச் சமூகங்களைச் சேர்ந்த மூத்தோரை முக்கியமாகக் கருத்தில்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்மூலம் ஹாவ் ரென் ‌ஹாவ் ஷியின் வீட்டு அத்தியாவசியப் பொருள் விநியோக நடவடிக்கை ஸ்ரீ சிவ கிரு‌ஷ்ணா கோயிலுக்குத் தருவிக்கப்பட்டது.

அதோடு கலையோவிய, உடற்பயிற்சி, இந்திய மதிய உணவு விருந்து போன்ற அங்கங்களும் புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில் இடம்பெற்றன. கோயில் வளாகத்தைத் தொடர்புகொள்வதற்கான, நலனுக்கான தளமாக உருவெடுக்கச் செய்வது இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

வீட்டு அத்தியாவசியப் பொருள்களை லாரிமூலம் ஹாவ் ரென் ஹாவ் ‌ஷி விநியோகித்தது. அவற்றை வரிசையில் நின்று பெற்றுக்கொள்ள குறைந்த வருமான ஊழியர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

நோக்கம்

பொதுவாக, சமூக அளவில் நடத்தப்படும் மூப்படைதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத, சிறுபான்மை இன மூத்த குடிமக்களை ஈர்ப்பது புரோஜெக்ட் ஸ்மைலின் நோக்கம் என்றார் அதன் தலைமை நிர்வாகி கிறிஸ்டஃபர் சேவியர்.

மார்சிலிங் வட்டாரத்தில் புரோஜெக்ட் ஸ்மைல் அதன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடம் ஸ்ரீ சிவ கிரு‌ஷ்ண கோயிலில் கடந்த ஜூன் மாதம் ஒதுக்கப்பட்டது. மார்சிலிங்-யூடி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான ஸாக்கி முகம்மதின் தூண்டுதலில் அவ்விடம் ஒதுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வீட்டு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதையும் அதில் இடம்பெற்ற பைலோக்சிங் உடற்பயிற்சி வகுப்பு ஒன்றையும் பார்வையிட திரு ஸாக்கி, ஸ்ரீ சிவ கிரு‌ஷ்ண கோயிலுக்கு நேரில் சென்றார். பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கும் மூத்தோரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கப் பள்ளிவாசல்களையும் கோயில்களையும் தொடர்புகொள்ளுமாறு ஆலோசனை அளித்திருந்தார்.

மருத்துவச் சோதனைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மூத்தோரை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கட்டமைப்பில் இந்நிகழச்சி அடங்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்