புகழ்பெற்ற ‘ஹோலி’ திருவிழாவை முன்னிட்டு வியட்நாம் - இந்தியா வழித்தடத்தில் செல்லும் அனைத்து ‘வியட்ஜெட்’ விமானங்களுக்கும் கட்டணம் $0 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் ஒருவழிப் பயணத்துக்கு மட்டும் பொருந்தும்.
இந்தச் சலுகை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
இந்த ஆண்டு மார்ச் 10 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம் என்று ‘வியட்ஜெட்’ தெரிவித்துள்ளது.
ஹனோய், ஹோ சி மின், டா நாங் நகரங்களில் இடைநிற்கும் பயணிகள் பிறகு புதுடெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு மலிவான விலையில் தங்கள் பயணத்தைத் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோலி கொண்டாட்டங்களின் மற்றொரு பகுதியாகச் சிறப்பு விமானப் பொழுதுபோக்கு, உணவு போன்றவை ‘வியட்ஜெட்’ பயணிகளுக்கு வழங்கப்படும்.
மேலும், மார்ச் மாதத்தில் ஹோ சி மின் நகரத்தை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுடன் இணைக்கும் இரண்டு புதிய நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக ‘வியட்ஜெட்’ கூறியது.
மேல்விவரங்களுக்கு www. vietjetair.com எனும் அதிகாரபூர்வ இணையத்தளத்தை நாடலாம்.