புதுமையா? பாரம்பரியமா? சிந்திக்க வைத்த தேசிய தினச் சிறப்புப் பட்டிமன்றம்

புதுமையா? பாரம்பரியமா? சிந்திக்க வைத்த தேசிய தினச் சிறப்புப் பட்டிமன்றம்

1 mins read
9e1121f7-d310-4518-b321-f5aef0a40dc7
திரு யூசுப் ராவுத்தர் ரஜித் பட்டிமன்றத்தின் நடுவராகச் செயல்பட்டார். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘60 ஆண்டுகள் சாதனை படைத்த சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் தேவை புதுமைச் சிந்தனையா? பாரம்பரிய விழுமியங்களா’ எனும் பட்டிமன்றம் இடம்பெற்றது.

செப்டம்பர் 12ஆம் தேதி மாலை பெக் கியோ சமூக மன்றத்தில் இடம்பெற்ற அந்நிகழ்ச்சிக்குத் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் பெக் கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

பட்டிமன்றத்திற்குத் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் நடுவராகப் பொறுப்பேற்றார். ‘புதுமைச் சிந்தனையே’ என்ற அணியின் சார்பில் திருவாட்டி இசக்கிசெல்வி கோவிந்தன், திருவாட்டி மீனாட்சி சங்கர், திரு சேதுராமன் ரமேஷ்ராஜா ஆகியோர் வாதாடினர்.

திருவாட்டி சக்திதேவி தமிழ்ச்செல்வன், திரு கேத்திரபாலன் மூக்காண்டி, திருவாட்டி செவியின்பம் சங்கீதா ஆகியோர் ‘பாரம்பரிய விழுமியங்களே’ என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர், நவீனத் தொழில்நுட்பங்கள் சிங்கப்பூரில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த எல்லா நாடுகளிலுமே இருக்கின்றன என்றும் சிங்கப்பூரின் தனித்துவம் என்பது அதன் பாரம்பரிய விழுமியம் மட்டுமே என்றும் கூறித் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்