உலகக் கிண்ணக் காற்பந்து: ரசிகர்களின் நள்ளிரவுப் பசிக்கு வண்ணமயமான சமோசாக்கள்

உலகக் கிண்ணக் காற்பந்து: ரசிகர்களின் நள்ளிரவுப் பசிக்கு வண்ணமயமான சமோசாக்கள்

படம்: ரீமா டுடெகுலா

10 Jul 2026 - 6:00 am

1 mins read

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் விறுவிறுப்புக்கு இடையில், நள்ளிரவில் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களின் பசியைத் தீர்க்கும் நோக்கில் மாறுபட்ட வடிவிலான சமோசாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மெக்பர்சன் சாலையில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் சமோசா’ (House of Samosas) உணவகம், ‘மேட்ச் நைட் மன்சீஸ் பாக்ஸ்’ (Match Night Munchies Box) என்ற பெயரில் தின்பண்டங்களைத் தொகுத்து வழங்குகிறது.

இந்தத் தொகுப்பில் 10 இனிப்பு அல்லது கார வகை சமோசாக்கள் இடம்பெறுகின்றன.

உணவகத்தில் திரையிடப்படும் போட்டிகளைக் கண்டுகளித்தவாறே வாடிக்கையாளர்கள், போட்டியில் பொருதும் காற்பந்து அணிகளின் தேசியக் கொடிகளின் வண்ணங்களைத் தாங்கிய சமோசாக்களை உண்டு மகிழலாம்.

வெந்தயக் கீரை நறுமணத்துடன் கூடிய ‘பட்டர் சிக்கன்’, இனிப்பான ‘ஆப்பிள் கிரம்பிள்’ ஆகிய சுவைகளில் சமோசாக்கள் இங்கு அதிகம் விற்பனையாகின்றன.

காற்பந்து வரலாற்றில் ஐந்து முறை வென்று சாதனை படைத்த பிரேசில் அணியைத் தாம் ஆதரிப்பதாக உணவகத்தின் ஹாஜா நிஜாமுத்தீன், 67, கூறினார்.

“வீட்டில் அடிக்கடி காற்பந்துப் போட்டிகளைக் கண்டு ரசிக்கிறோம். இந்தக் குதூகலம், நம் உணவகத்திலும் நிறையட்டுமே என்று சிறப்புச் சமோசாவை அறிமுகத்தினோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உணவுக்கடைஉலகக் கிண்ணம்காற்பந்து