இந்திய முஸ்லிம் பேரவையின் ‘இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்’

2 mins read
2d7e0ac2-ffac-42f2-bfa8-6af4d6f719a2
(இடமிருந்து) இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முஹம்மது பிலால், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சித்ரா சங்கரன், முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) தலைவர் புதிய நிலா ஜஹாங்கீர். - படம்: இந்திய முஸ்லிம் பேரவை
multi-img1 of 3

தமிழ்மொழி விழா கொண்டாட்டத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய முஸ்லிம் பேரவை எட்டாவது ஆண்டாக ‘இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்’ கருப்பொருளோடு ‘சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு அரங்கம்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவோடு முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் உள்ளூர் பேச்சாளர்கள் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சித்ரா சங்கரனும் சிம் பல்கலைக்கழக மாணவர் முஹம்மது ஜாஃபிரும் உரையாற்றினர்.

வீடுகளில் தமிழில் பேசிப் புழங்க வேண்டியதன் அவசியத்தை திருவாட்டி நர்கிஸ் பானுவும் முனைவர் உமையாளும் எழுதி இயக்கிய ‘நம் சொத்து’ நாடகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கெவின் மைக்கேலும் ஆயிஷா இப்ராஹிமும் ரம்யா அன்பழகனுடன் இணைந்து படைத்தனர்.

அந்நாடகத்தில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு பற்றிய செய்திகள் பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படைத்த கவியரங்கத்தை கவிஞர் தமீம் அன்சாரி தலைமையேற்று நடத்தினார். மாணவர்கள் சிரன் கிருஷ்ணா, வர்ஷிகா கண்ணன், சையத் நிஃப்ராஸ், கனிஷ்கா பாலாஜி ஆகிய நான்கு மாணவக் கவிஞர்கள் அவர்களே கவிதை எழுதி கவியரங்கில் படைத்தனர்.

நினைவாற்றல் மங்கிக்கொண்டே போகும் இக்காலத்தில் ‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் இயற்கை நுண்ணறிவு வெளிப்படுத்தப்பட்டது.

ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவருமான முஹம்மது பிலால் தமது தலைமையுரையில், சிங்கப்பூரில் தமிழை நீடித்து நிலைத்திருக்கும் வாழும் மொழியாக்க மாணவர்கள், இளையர்கள் தமிழிலும் பேச வேண்டும் என்பதோடு சமூக அமைப்புகள் தமிழர்களின் இல்லங்களுக்கு தமிழைக் கொண்டுசேர்க்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்