மீண்டும் வந்துவிட்டது ‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழா

சிறப்புச் சலுகைகள், போட்டிகள்

மீண்டும் வந்துவிட்டது ‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழா

2 mins read
855d6479-b1b3-4e0b-bca2-0113b2a63dff
‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழா ஜூலை 16ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெற இருக்கிறது. - படம்: ஸாக் சலாம் இந்தியா

வரும் ஆடி மாதத்தை முன்னிட்டு ‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழா சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கிற்கு மீண்டும் வருகிறது.

42வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விற்பனைத் திருவிழா ஜூலை 16ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெற இருக்கிறது.

மங்கல நிகழ்ச்சி, செழிப்பு, பிரம்மாண்டமான விற்பனைத் தள்ளுபடிகளுக்கு நன்கு அறியப்பட்ட ஆடி மாதத்தில் மணப்பெண் அலங்காரம், விழாக்கால நவீன ஆடை அணிகலன்கள், கைவினை நகை வேலைப்பாடுகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், அன்றாட வாழ்க்கைப்பாணிக்கு அழகூட்டும் அம்சங்கள் ஆகியவற்றோடு சுவைமிகு உணவு வகைகளையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.

விற்பனைத் திருவிழாவிற்கு வருகை தருவோர்க்கு ஒவ்வொரு நாளும் இரு விமானப் பயணச்சீட்டுகளை வெல்லும் வாய்ப்பும் கிட்டும். குவாங்சோ, பேங்காக், லங்காவி, ஹோ சி மின் ஆகிய நகரங்களுக்குச் செல்ல விமானப் பயணச்சீட்டுகளை பங்கேற்போர் வெல்ல வாய்ப்புள்ளது.

உணவுப் பிரியர்கள், ஆடி உற்சவம் மற்றும் இன நல்லிணக்க இரவு விருந்துகளில் கலந்துகொள்ளலாம்.

அனைத்து வயதினரும் கேரம், சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்கலாம். கலை ஆர்வம் உள்ளவர்கள் முப்பரிமாண ரங்கோலிப் போட்டியில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்.

அத்துடன், ஆண்களுக்குச் சிறப்பான ஒரு சமையல் போட்டியும் நடைபெறவுள்ளது.

அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க பொதுமக்கள் zaksalaamindia.com என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இணையம் வழியாக மட்டுமே போட்டிகளுக்குப் பதிவுசெய்ய முடியும்.

அனைத்தும் ஒரே கூரையின்கீழ் கிடைக்கும் வண்ணம், கண்காட்சி கலந்த விற்பனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை மட்டுமல்லாது மக்களுடன் இருவழித் தொடர்புகொள்ளக்கூடிய நேரடி நிகழ்ச்சிகளும் கண்காட்சியை நிறைக்கும்.

பணம் திரும்பப்பெறும் சலுகைகள், கட்டணக் கழிவுகள், பரிசுப்பொருள்கள் ஆகியனவும் விற்பனைத் திருவிழாவுக்கு வருவோரை குதூகலப்படுத்த உள்ளன.

‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழாவுக்கு அனுமதி இலவசம்.

இந்த விற்பனைத் திருவிழா ஆண்டுக்கு மும்முறை ஏற்பாடு செய்யப்படுகிறது. இது சிங்கப்பூரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விற்பனைக் கண்காட்சிகளில் ஒன்று.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பெருந்தள்ளுபடி விற்பனைத் திருவிழாவை அக்டோபர் 16ஆம் தேதிமுதல் 25ஆம் தேதிவரை மக்கள் எதிர்பார்க்கலாம்.

அத்துடன், அடுத்த ஆண்டு பிப்ரவரி, ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களிலும் ‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழா நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்