கிருமி நாசினிக்குப் பதிலாக மதுபானத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தும் ஜப்பான் சுகாதார அமைச்சு

1 mins read
441ca696-90a1-43a5-944c-65835f526068
நேப்பாளத்தில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் ஒருவர் கிருமிநாசினியை வழங்கும் படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமிப் பரவலை தடுக்க 'சானிடைசர்' எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

கிருமி நாசினியை பல நாடுகள் லாரிகளில் வைத்து பெருமளவில் தெளித்து வருகின்றன.

ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 40 முதல் 80% வரை 'ஆல்கஹால்' எனப்படும் மதுபானம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, கிருமி நாசினிக்கு பதிலாக மதுபானத்தையே நேரடியாகப் பயன்படுத்த ஜப்பான் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மதுபானங்களில் ஒருவகையான 'வோட்காவை 'கிருமிநாசினியாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினியைவிட நேரடியாக பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு வீரியம் அதிகம் என்று கூறப்படுகிறது.

எனவே வோட்காவை நேரடியாக பயன்படுத்துவதைவிட அதனை தண்ணீருடன் கலந்து கைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்த ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்