தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியத் தமிழ்த் திரைப்படத்திற்கு அனைத்துலக விருது

1 mins read
f30b9204-e912-467c-a35f-6dbb21178bcb
2019ஆம் ஆண்டில் வெளியான 'என்னவள்' திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பலரது பாராட்டையும் பெற்றது. படம்: இணையம் -

மலேசியாவில் எடுக்கப்பட்ட 'என்னவள்' திரைப்படம், 'டொரோன்டோ அனைத்துலகத் தமிழ்த் திரைப்பட விழா 2021'ல் 'சிறந்த கிரைம் திரில்லர்' படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது.

ஆண்-பெண் உறவில் நம்பிக்கையும் தொடர்பும் எவ்வளவு முக்கியம் என்பதை 'என்னவள்' எடுத்துக்காட்டுகிறது. பல உண்மைக் கதாபாத்திரங்கள், நிகழ்வுகளால் உந்தப்பட்டு, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

தம்பதியர்க்கு இடையிலான உறவை உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டும் இப்படத்தின் திரைக்கதை, ரசிகர்களிடம் ஆழமானதொரு செய்தியைக் கொண்டுசெல்லும் வகையில் அமைந்துள்ளது.

முன்னணி நடிகர்களான சி.குமரேசன், சங்கீதா கிருஷ்ணசாமி, வசந்த் சர்ணா ஆகியோரின் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் சரண் இஸட்.

கோலாலம்பூர், சிட்னி உள்ளிட்ட இடங்களில் 'என்னவள்' படமாக்கப்பட்டது.

2019 செப்டம்பர் 26ஆம் தேதி வெளியான இப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பலரது பாராட்டையும் பெற்றது.