தனது இளைய அமைச்சர்களும் அர சியல் பதவி வகிப்பவர்களும் (4ஆம் தலைமுறைத் தலைவர்கள்) திரு ஹெங் சுவீ கியட்டை தங்கள் குழு வின் எதிர்காலத் தலைவராகத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்றும் திரு ஹெங்கின் வேண்டுகோளுக் கிணங்க திரு சான் சுன் சிங் அவ ருக்குத் துணையாகச் செயல்படுவார் என்றும் மக்கள் செயல் கட்சி கடந்த மாதம் 23ஆம் தேதி அறிவித்தது. அதை மக்கள் செயல் கட்சியின் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
திரு ஹெங்கும் திரு சானும் முறையே கட்சியின் முதலாம் உதவித் தலைமைச் செயலாளராகவும் இரண் டாம் உதவித் தலைமைச் செயலாள ராகவும் கட்சியின் மத்திய செயற் குழுவால் நியமிக்கப்பட்டனர். இந்த அறிவிப்புகள் நமது அரசி யல் தலைமைத்துவ மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தன. அடுத்த பொதுத் தேர்தல் முடிந்து சில காலத்துக்குப் பிறகு பிரதமர் பதவியிலிருந்து தாம் விலக விரும் புவதாக திரு லீ சியன் லூங் ஏற் கெனவே அறிவித்துள்ளார். அதற்கு முன் தலைமைத்துவ மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். அது கட்சிக்கு மட்டுமல்லாது நாட் டுக்கும் முன்னுரிமை நடவடிக்கை யாகக் கருதப்படுகிறது என்றும் பிரதமர் கருத்துரைத்தார்.
மக்கள் செயல் கட்சியின் எதிர் காலத் தலைமைத்துவக் குழு எது என்பதை சிங்கப்பூரர்களுக்கு அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே தெரிவிப்பது மிக முக்கியம். காரணம் அதை வைத்துதான் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்வார்கள். தேர்தலின் முடிவுகள்தான் நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யும். அதன் தாக்கம் ஒவ்வொரு தனிநபரையும் அவர் களின் குடும்பத்தையும் சென்று சேரும். ஆக, யாரது கைகளில் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது வர்த்தகங்களுக்கும் முதலீட்டா ளர்களுக்கும் ஒரு திடமான உறுதியை வழங்கும். அது சிங்கப்பூரின் அடுத்த கட்ட கதையில் நமக்கு முக்கிய பங்க ளிக்கும்.
திரு ஹெங்குடனும் (அவர் கல்வி அமைச்சிலும் நிதி அமைச்சிலும் அமைச்சராக இருந்தபோது நான் அவருக்குத் துணையாக இருந்துள்ளேன்) திரு சானு டனும் (தஞ்சோங் பகார் குழுத் தொகுதி யில் அவர் எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்) பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.

