தேக்கா மார்க்கெட் பகுதியில் குடியிருப்பவர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் பலன் கிடைத்திருக்கிறது. தேக்கா உணவு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மது விற்பனை நேரம் குறைக்கப் பட்டிருப்பதால் இனி அவர்களால் ஓய்வு நாளை சற்று நிம்மதியாக கழிக்க முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேக்கா உணவு நிலையத்தில் பலர் கூடுவார்கள். நள்ளிரவு வரையில் மது அருந்துவார் கள். இரைச்சல், கூச்சல் பல நேரங்களில் பலத்த வாக்கு வாதம், தொடர்ந்து கைகலப்பு அதற்குமேல் குடிபோதையில் சிலர் வாந்தி யெடுப்பது, சிறுநீர் கழிப்பது என தாங் கொணா தொல்லைகளைத் தொடர்ந்து அனுபவித்து வந்தனர் அங்கு வசிப்பவர்கள். அதனால் அவசரத்துக் குக்கூட வீட்டிலிருந்து கீழே இறங்கி வருவது பலருக்கு பெரும் சங்கடமாக இருந்தது.
இதுவரையில் இரவு 11.59 வரையில் மது விற்பனைக்கு அங்கு அனுமதி இருந்தது. இந்த மாதம் முதல் தேதியில் இருந்து மது விற்பனை நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்று குறைக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிங்கப்பூர் எங்கும் பொது இடங்களில் மது அருந்தவும் பல இடங்களில் மது விற்பதற்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
மேலும், சிறிய இடங்களில் அதிகமானோர் கூடி மது அருந்தும் பகுதிகளான கேலாங், லிட்டில் இந்தியா பகுதிகள் மது அருந்த அதிக கட்டுப்பாடுள்ள இடங்களாக் கப்பட்டன. எனினும், தேக்கா வட்டாரக் குடியிருப்பாளர் களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. அங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் குழுக்களாகக் கூடி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, தற்போது புதிய மது விற்பனை நேரம் மாலை வரை குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலைகளில் அதிகபட்ச வருமானத்தைப் பார்த்துவந்த மதுபான விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு பேரடியாகத்தான் இருக்கும். அதேபோல் ஞாயிறு மாலைகளில் பீர் அருந்தும் அவ்வட்டாரவாசி களுக்கும் தேக்காவில் ஒன்றுகூடி நண்பர்கள், உறவினர் களுடன் ஆறஅமர பீர் அருந்தி விடுமுறையை உல்லாச மாகக் கழிக்கும் இந்திய நாட்டு ஊழியர்களுக்கும் இது சங்கடம்தான்.
என்றாலும் அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் பலநூறு பேரின் நீண்டகாலத் துன்பத்துடன் ஒப்பிட ஒரு பிரி வினரின் இழப்பு பெரியதல்ல.
தேக்காவில் இரவு வரையில் குடிப்பதற்கு அனுமதி பெற்ற வேறு இடங்கள் இருக்கவே செய்கின்றன. மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது தங்குமிடங்களில் மது அருந்தவும் வசதிகள் உண்டு. வருமான இழப்பைச் சந்திக்கும் சில கடைக்காரர்களும் நிச்சயம் மாற்று வழி களை நாட முடியும்.
ஆனால், அங்கே குடியிருப்பவர்கள் ஞாயிறு மாலையை அமைதியாகக் கழிக்கவும் பயமின்றி தங்கள் பகுதியில் நடமாடவும் அசுத்தமில்லாத சுற்றுப்புறத்தில் வாழவும் மாற்று வழி ஏதுமில்லை. சிங்கப்பூரின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் பாதுகாப்பான, நிம்மதியான, தூய்மையான சூழலில் வாழ முடியவேண்டும்.
அனைத்து சிங்கப்பூரர்களும் உயர்தரமான, வசதியான வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். எல்லா மக்க ளுக்கும் தரமான, வசதியான வாழ்க்கையையும் வாழுமிடத் தையும் ஏற்படுத்தித் தருவதே அரசாங்கத்தின் இலக்கு. இந்த மது விற்பனைக் கட்டுப்பாடுகளை ஒரு தரப்பின ருக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை என்று கருது பவர்கள் அங்கு வசிப்பவர்களைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அத்துடன் மதுப்பழக்கத்தால், குறிப்பாக இந்தியர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளும் பின்னடைவுகளும் மிக அதிகம். அளவுக்கதிகமாக மது அருந்துவதால் நல்ல வாழ்க்கை முறையையும் நற்சிந்தனையையும் இழப்ப துடன் பெருமளவில் பணத்தையும் இழக்கின்றனர். தங் களைக் கட்டுப்படுத்த முடியாத அத்தகையவர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் சிறிதாவது உதவியாக இருக்கும்.
பல வகையிலும் நன்மை பயக்கும் இந்த மது விற் பனைக் கட்டுப்பாடு எப்போதோ நடப்புக்குக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டியது. இப்போதாவது வந்ததே என மகிழ்வோம்.

