கி.ராமமூர்த்தி, தலைவர், மக்கள் கழக நற்பணிப் பேரவை
அண்மையில் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் தங்களின் நாற்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடின. 1977ஆம் ஆண்டில் முதன் முதலில் காலாங் சமூக மன்றத்தில் இந்தியர் கலாசாரக் குழு தொடங்கப்பட்ட இந் திய கலாசாரக் குழு இன்று பல பரி மாணங்களைப் பெற்று இந்தியர் நற்ப ணிச் செயற்குழு என்ற பெயரில் இயங் குகிறது. தற்போது சிங்கப்பூரில் 97 இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இயங்கி வருகின்றன.
ஆரம்ப காலத்தில், நமது பாரம் பரிய கலாசாரத்தை அறிமுகப்படுத்துவ தன் மூலம் குடியிருப்பாளர்கள் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத் துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்த இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் நோக்கம் இன்று பன்மடங்கு விரிவடைந்துள்ளது. வட்டார மக்களிடையே நட்புறவை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், மாறிவரும் இந்திய சமூகத் தேவை களுக்கு ஏற்ப அதன் நடவடிக்கைகளையும் ஈடுகொடுக்குமாறு மேம்படுத்தி உள்ளது. முழுமையாகப் படிக்க: epaper.tamilmurasu.com.sg

