நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் பிப்ரவரி 19ஆம் தேதி வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இத்திட்டம் அண்மையில் நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாண்டின் வரவுசெலவுத் திட் டம் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில், சிங்கப்பூரை ஒரு நல்ல நிலையில் நிறுத்துவதற்கான உத்திபூர்வ, ஒருங் கிணைந்த நிதித் திட்டமாகும். ஆசியா வுக்கு மாறும் உலகளாவியப் பொருளி யல் பாரம், தொழில்நுட்பம், மூப்படையும் மக்கள்தொகை ஆகிய மூன்று பெரும் போக்குகளைக் கருத்தில்கொண்டு திட்டம் வகுக்கப்பட்டது.
துடிப்பும் புத்தாக்கமும் நிறைந்த பொருளியலை உருவாக்கவும் சிங்கப் பூரை பசுமையான, வாழத்தகுந்த நகர மாக்கவும் பரிவுமிக்க, ஒன்றிணைந்த சமுதாயத்தை ஊக்குவிக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் பற்பல நடவடிக் கைகள் உள்ளன. நமது செலவின் தேவைகளை நிறை வேற்றவும் பற்பல நடவடிக்கைகளையும் 2020 வரை அமலாக்கவும் நம்மிடம் போதிய வருவாய் உள்ளது. ஆனால் 2021 முதல், நமது தேவை களும் அதிகரிக்கும், குறிப்பாகப் பின்வரு வனவற்றில்:
* சுகாதாரப் பராமரிப்பு - இப்போது முதல் 2030 வரை, 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை 450,000ல் இருந்து 900,000 ஆக இருமடங்கு அதி கரிக்கும். தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆக இருக்கும் சுகா தாரப் பராமரிப்புச் செலவினம், அடுத்த பத்தாண்டுகளில் 3 விழுக்காட்டுக்கு உய ரும் என கணிக்கப்படுகிறது.
* உள்கட்டமைப்பு - நாங்கள் ரயில் கட் டமைப்பை விரிவுபடுத்தி, பல வட்டாரங் களைப் புதுப்பித்து, சாங்கி விமான நிலை யத்தின் 5வது முனையக் கட்டடம், மாபெ ரும் துவாஸ் துறைமுகம், கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் ஆகியவற்றைக் கட்டுகிறோம். இவையெல்லாம் பொருளி யல் வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, வேலை களை உருவாக்கித் தரும்.

