நமது குற்றவியல் நீதி முறையை மேம்படுத்துவோம்

நமது குற்றவியல் நீதி முறையை மேம்படுத்துவோம்

4 mins read
80fde108-1fde-46eb-85b6-cf9308a374eb
-

இந்திராணி ராஜா

நியாயமான, நீதி வழுவாத குற்றவியல் நீதி முறையே நாகரிகமடைந்த சமுதா யத்தின் அடிக்கல். இத்தகைய நீதி முறை வெவ்வேறு நலன்களுக்கு இடையில் சமநிலை காணவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண் டும். அதே சமயத்தில், தண்டனையும் தண்டனை அளிக்கும் நீதி முறையும் நியாயமாக இருக்கவேண்டும். குற் றத்திற்கு இலக்கானவர்களுக்கும் குறை தீர்க்கப்படவேண்டும்.

அரசாங்கம் அதிக நவீனமான, சம நிலையான குற்றவியல் நீதி முறையை நிலைநாட்ட படிப்படியான மாற்றங் களைச் செய்து வருகிறது. ஆக அண்மையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சான்று சட்டம், குற்றவியல் சட்ட (தற்காலிக நிபந்தனைகள்) சட்டம் ஆகியவற்றை மேம்படுத்த நாடாளுமன் றத்தில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட் டன.

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திலும் சான்று சட்டத்திலும் 50க்கும் மேலான திருத்தங்கள் செய்யப்பட்டன. இப்போது, சாட்சிகளிடமிருந்து காணொளிப் பதிவின்மூலம் வாக்கு மூலங்கள் எடுக்கலாம். சாட்சியுடன் நடத்தப்பட்ட பேட்டியின் விவரங்களைக் காணொளிப் பதிவு தற்சார்பின்றி எடுத்து ரைக்கும். வாக்குமூலம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதா இல்லையா என்பது பற்றிய வாக்குவாதங்களைக் குறைக்க இது உதவும்.

பயங்கரவாதச் செயலில் சம்பந்தப் பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை, ஆண் அதிகாரி சோதனையிட அனுமதிக்கும் வகையிலும் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறோம். ஆண் அதி காரி சோதனையிடுவதற்குப் பின்வரும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும்:

*பயங்கரவாதச் செயல் உடனடியாக நிகழக்கூடிய அபாயம் நெருங்கிவிட்டதாக ஆண் அதிகாரி உண்மையாகவே நம்ப வேண்டும்:

* அச்சமயத்தில் சோதனையிட பெண் அதிகாரி யாரும் இல்லை; *மிகவும் ஒழுக்கமான முறையில் சோதனையிட வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல்களில் பெண்கள் பயன்படுத்தப்பட்ட பல பதிவுகள் வரலாற்றில் உள்ளன. 1991ல், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படு கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 17 வயது பெண்ணைப் பயன்படுத்தினார் கள். அந்தப் பெண் அவரது பாதங்களைத் தொடுவதற்காகக் குனிந்தபோது குண்டு வெடித்து தற்கொலைத் தாக்குதல் நடத் தப்பட்டது. அண்மையில், நைஜீரியாவின் 'பொக்கோ ஹராம்' பயங்கரவாதப் பிரிவு 13 வயது முதலான இளம் பெண்களைக் கடத்தி, கூட்டமான இடங்களில் தற் கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த கட்டாயப்படுத்தி வருகிறது. இதுவரை 1,225க்கும் மேலானோர் கொல்லப்பட்டு விட்டனர்.

பிணை ஆணை நடைமுறையும் மேம் படுத்தப்பட்டுள்ளது. பின்வருபவை இனி மேல் குற்றமாகக் கருதப்படும்: * பிணை ஆணையை மீறுதல்;

* பயணப் பத்திரங்கள் பறிமுதல் செய் யப்பட்டிருக்கும்போது அனுமதியின்றி சிங்கப்பூரிலிருந்து வெளியேறுதல்; *உத்தரவாதம் அளிப்பவருக்கு இழப் பீட்டை ஈடுசெய்தல் அல்லது நீங்கள் உத் தரவாதம் அளிப்பதாக இருந்தால், இழப் பீடு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள சம்மதித்தல். குற்றவாளிக்கு உத்தரவாதம் கொடுத்தல் கடுமையான பொறுப்பாகும். குற்றவாளி நீதிமன்றத்திற்கு வருவதை உறுதிப்படுத்தத் தவறிய பொறுப்பை உத் தரவாதம் அளிப்பவர் ஏற்றாகவேண்டும். பாலியல் குற்றத்திற்கும் சிறு பிள்ளை களைக் குறி வைக்கும் குற்றத்திற்கும் இலக்காவோரின் மீதான நெருக்குதல் குறைக்கப்பட்டுள்ளது:

*புகார் தொடுக்கப்படுவதற்கு முன்பு கூட, குற்றத்திற்கு இலக்கானதாகக் கூறப்படுபவரின் அடையாளத்தை வெளி யிட முடியாது.

*பலவீனமான நிலையிலுள்ள சாட்சி கள் ஒரு திரைக்குப் பின்னாலிருந்து சாட் சியம் அளிக்க அனுமதிக்கப்படும். *குற்றத்திற்கு இலக்கானதாகக் கூறப்படுபவரின் வாக்குமூலம் நீதிமன்ற கதவடைப்புடன் கேட்கப்படும். *குற்றத்திற்கு இலக்கானதாகக் கூறப்படுபவரிடம், குற்றச்சாட்டுடன் தொடர்பில்லாத கடந்தகாலப் பாலியல் நடத்தைகள் பற்றி கேள்விகள் கேட்க நீதிமன்றத்திடம் அனுமதி பெறவேண்டும்.

அண்மையில், பாலியல் குற்றங்களை உணர்ச்சிபூர்வமான முறையில் கையாள சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் காவல்துறை களமிறக்கியுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு இலக்காவோர் அதுபற்றி புகார் செய்ய இந்த மாற்றங்கள் ஊக்க மளிக்கும் என நம்புகிறோம்.

அதிகமான குற்றங்களையும் குற்ற வாளிகளையும் உள்ளடக்கும் வகையில் சமூகத் தண்டனைகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. சிறு குற்றங்கள் புரியும் குற்றவாளிகளில் அதிகமானோர் சமூகத்தில் மறுவாழ்வு பெற்று திருந்திவாழ இது வாய்ப்பளிக்கும்.

இப்போது நீதிமன்றங்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்ட சிறைத் தண்ட னையுடன் சமூகத் தண்டனையும் விதிக் கலாம். குற்றவாளிகள் சிறைத் தண்டனை யைத் தவிர்ப்பதற்காகச் சமூகத் தண்டனை யைப் பூர்த்தி செய்ய இது ஊக்கமளிக்கும். குற்றங்களுக்கு இலக்காவோர் இனி மேல் குற்றவியல் வழக்குகளில் அதிக எளிதாக இழப்பீடு பெற இயலும்: *இழப்பீடு வழங்கப்படாவிட்டால் நீதி மன்றம் அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். *குற்றத்திற்கு இலக்காவோர் நீதி மன்றத்தில் வாதம் செய்து அல்லது ஆதாரம் அளித்து இழப்பீட்டு உத்தரவுக்கான நடைமுறையில் பங்குபெறலாம்.

*குற்றச்செயலால் உயிரிழப்பவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும், இறுதிச் சடங்குக்கும் இழப்பீடு கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடலாம். குற்றவியல் சட்ட (தற்காலிக நிபந்த னைகள்) சட்டத்தை நாடாளுமன்றம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது. சிங்கப்பூரில் பொதுமக்களின் பாதுகாப் பையும், அமைதியையும், சீர்நிலையையும் கட்டிக்காக்க இச்சட்டம் தொடர்ந்து அவசியமானதாக இருக்கிறது.

குற்றத்திற்கு இலக்காவோர், குற்றம் சாட்டப்படுவோர், சமுதாயம் ஆகியோ ரின் நலன்களுக்கு இடையில் சமநிலை காணும் நியாயமான, நீதி வழுவாத நிதி முறையை நிலைநாட்டும் நோக்கத் துடன் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன.