மருத்துவமனைகள்: வரவேற்கத்தக்க வகையில் விவேக முயற்சி

மருத்துவமனைகள்: வரவேற்கத்தக்க வகையில் விவேக முயற்சி

4 mins read
baa2bf0a-cf52-4148-85ca-d737c2982606
-

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குக் கிடைக்­கக்­கூ­டிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உல­கத் தரம் வாய்ந்­தவை. அவர்களின் ஆயுள் உல­கி­லேயே ஆக அதி­க­மாக இருப்­ப­தற்கு இது­வும் கார­ணம்.

மருத்துவப் பராமரிப்பைப் பொறுத்தவரை, தேவைப்­ ப­டக்­கூ­டிய மக்­க­ளின் தேவையை உரிய காலத்­தில் குறை­வின்றி நிறை­வேற்­றும் அள­வுக்கு வளங்­களும் வச­தி­களும் இருப்­பதை உறு­திப்­ப­டுத்து­வ­தில் குறிப்பாக பொது மருத்­து­வ­ம­னை­கள் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்றன.

மக்­களில் சிலர் தேவை­யில்­லா­மல் அவ­சர சிகிச்சைப் பிரி­வைப் பயன்­ப­டுத்­தும் போக்கு உண்டு என்­றா­லும்­கூட அத­னால் அவ­சர சிகிச்சை தேவைப்­ ப­டு­வோ­ருக்கு எந்தவித தாம­த­மும் பாதிப்­பும் ஏற்­பா­டாத வகை­யில் சுகா­தா­ரப் ப­ரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­கள் திறம்­பட இடம்­பெற்று வந்த நிலை­யில் யாரும் எதிர்­பா­ராத வகை­யில் கொரோனா கிருமி எல்­லா­வற்றை­யும் புரட்­டிப் போட்டு­விட்­டது.

கொவிட்-19 நோயா­ளி­க­ளைக் குணப்­படுத்து வதற்காகவே மருத்­துவமனை­கள் தங்­க­ளு­டைய வளங்­களில் ஏராளமான­வற்­றைத் திருப்­பி­வி­ட­வேண்டிய சூழல் எற்­பட்­டது. வழக்கமாக செயல்படும் முறையையே மாற்றி அமைக்க வேண்டிய நிலை மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டது.

அவ­சர சிகிச்சை தேவைப்­ப­டு­வோர் ஒரு பக்கம்; இதர சிகிச்சை பெற­வேண்­டி­ய­வர்­கள் மறு­பு­றம்; கிடு­கி­டு­வென அதி­க­ரித்த கொவிட்-19 நோயாளி­கள் வேறு ஒரு பக்­கம் என்று மூச்சு திண­ரும் அள­வுக்­குச் சூழல் தலை­தூக்­கி­யது.

சுகா­தாரப் பரா­ம­ரிப்பு வளங்­களும் அந்­தத் துறையைச் சேர்ந்த ஊழி­யர்­களும், சுமக்க இய­லாத அள­வுக்குச் சுமை­கள் இருந்­த­போ­தி­லும் அரும்­பாடு­பட்டு நில­வ­ரங்­க­ளைச் செம்­மை­யாக சமா­ளித்­த­னர்.

இந்த முயற்­சி­கள் முந்­திய அள­வுக்கு இல்லை என்றா­லும் இப்போதும் தொடர்­கின்­றன.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஒடுங்கி வந்த நிலை­யில் அந்­தக் கிருமி உரு­மாறி எக்ஸ்­பிபி என்ற வடி­வில் தலை­தூக்கி பல­ரும் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட கார­ணத்­தால் பொது மருத்­து­வ­ம­னை­கள் மறு­ப­டி­யும் தங்­கள் வளங்­களைக் கணிசமான அள­வுக்கு அத்­த­கைய நோயா­ளிகளுக்­காக ஒதுக்­கி­வைக்க வேண்­டியதாயிற்று.

அவ­சர சிகிச்சைப் பிரி­வு­க­ளின் சுமை அதி­கமாக இருந்து வரும் நிலை ஒரு பக்­கம் இருந்­தாலும் அத்­த­கைய நோயா­ளி­க­ளுக்­கென்றே 800 படுக்­கை­கள் ஒதுக்கி வைக்­கப்­பட்­டன.

ஆனால் நில­வ­ரம் எதிர்­பார்க்­கப்­பட்ட அள­வுக்கு இல்லை. மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளாக இருப்­ப­தா­லும் உரு­மா­றிய கொவிட்-19 தொற்று கார­ண­மாக கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­பா­டாத வகை­யில் மக்­க­ளின் உட­லில் நோய் எதிர்ப்பு ஆற்­றல் இருப்­ப­தா­லும் பாதிப்­பு­கள் அவ்­வ­ள­வாக இல்லை.

உச்ச நேரத்­தில்கூட அந்­தப் படுக்­கை­களில் ஏறக்­கு­றைய 800 தான் நிரம்­பின. மற்ற நேரத்­தில் 300 படுக்­கை­கள் காலி­யா­கவே இருந்­தன.

அத்­த­கைய கிரு­மித்­தொற்று நோயாளிகளுக்­காக படுக்­கை­களை ஒதுக்­கி­வைக்க வேண்டிய அவ­சியம் இல்­லா­மல் போயிற்று.

ஆகை­யால் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக கிசிச்­சைப் பிரிவை முழு­மை­யாக ஒதுக்­கி­வைக்­கும் நடை­மு­றையை பொது மருத்­துவமனை­கள் இப்போது நிறுத்தி இருக்­கின்­றன.

மற்ற நோயா­ளி­க­ளைக் கவ­னிப்­ப­தைப் போலவே கொரோனா நோயா­ளிக­ளுக்­கும் அவர்களின் பாதிப்­பு­க்கு ஏற்ப அவை சிகிச்சை வழங்­கு­கின்­றன.

அதே­வே­ளை­யில், தொற்­றக்­கூ­டிய கிரு­மி­யைப் பரப்­பி­வி­டும் அள­வுக்கு ஆபத்து உள்­ள­வர் என்று தெரியவந்­தால் அத்­த­கைய நோயா­ளி­யைத் தனி­மைப்­ப­டுத்தி தனி படுக்­கை­யைப் பயன்­ப­டுத்­தும் நடை­முறையையும் அவை பின்­பற்­று­கின்­றன.

அவ­சர சிகிச்சை தேவைப்­படும் சூழ­லில் ஒவ்­வொரு படுக்­கை­யும் உயிர்­நா­டி­யானதே. அப்­ப­டிப்­பட்ட சூழ­லில் ஒரு குறிப்­பிட்ட வகை நோயாளி களுக்­கென்றே 800 படுக்கைகளை ஒதுக்கி வைக்க வேண்­டு­மென்­றால் அத­னால் மருத்­து­வ­ம­னை­யின் செயல்­மு­றை­கள் சங்­க­டத்­திற்கு உள்­ளா­கும்.

அவ­சர சிகிச்சைப் பிரி­வு­களில் படுக்­கை­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும் நோயா­ளி­க­ளுக்கு உரிய படுக்கை­களை ஒதுக்கி சிகிச்சை அளிப்­பது தாம­த­மா­கும். உரிய சிகிச்சை தேவைப்­ப­டு­வோ­ருக்கு உரிய நேரத்­தில் படுக்­கை­கள் கிடைக்­காத சூழ்நிலை இருந்­தால் நோயா­ளி­கள் காத்­தி­ருக்­கும் நேரத்­தில் அத­னால் எந்த அள­வுக்கு விளை­வு­கள் ஏற்­படும் என்­பதை சொல்­லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை.

மருத்­து­வ­ம­னை­கள் அண்­மை­யில் இத்­த­கைய நிலையை சந்­தித்து இருக்­கின்­றன. ஆகை­யால், 800 படுக்­கை­கள் விடு­விக்­கப்­படும் என்­பது இந்­தத் தரு­ணத்­தில் வர­வேற்­கத்­தக்க ஒன்­றக இருக்­கிறது.

இத­னால் மற்ற நோயா­ளி­க­ளுக்­குப் படுக்கைகள் கிடைக்க வசதி ஏற்­படும். மருத்­து­வ­ம­னை­களும் கிடைக்­கக்­கூ­டிய படுக்கை வளங்­களைச் செம்மையாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சிறப்­பாக செயல்­பட வழி ஏற்­படும்.

தொற்றுக்காலம் என்று இல்­லா­மல் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­களைத் தொடர்ந்து மேம்­ப­டுத்திவர அர­சாங்­கம் இடை­வி­டா­மல் முயற்­சி­களை எடுத்து வரு­கிறது. இந்த முயற்­சி­கள் கொவிட்-19 காரணமாக தாம­தம் அடைந்து இருக்­கின்­றன.

கட்­டு­மானத் துறை­யில் இடை­யூ­று­கள் ஏற்­பட்­ட­தால் புதிய மருத்­துவ வச­தி­களை உரிய நேரத்­தில் தொடங்க முடி­யா­மல் போய்­விட்­டது.

இருந்­தா­லும்­ இப்­போது சூழ்­நிலை மாறி இருக்­கிறது. அடுத்த உட்லண்ட்ஸ் சுகா­தார வளா­க­மும் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு மைய­மும் ஆண்டு முடி­வில் இருந்து கட்­டம் கட்­ட­மா­கத் திறக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யின் மருத்துவ வளா­கம் விரி­வாக்­கப்­படும். இவற்­றின் விளை­வாக அடுத்த ஐந்­தாண்­டு­களில் பொது மருத்­து­வ­ம­னை­களில் கூடு­த­லாக 1,900 படுக்­கை­கள் உரு­வாக்­கப்­படும்.

இவை ஒரு­பு­றம் இருக்க, உடல்­நிலை சீராக இருக்­கின்ற, மருத்­துவ­ம­னை­களில் இருந்து வீட்டுக்கு திரும்­ப­வி­ருக்­கின்ற அல்­லது தாதிமை இல்­லம் போன்ற நிலை­யங்­க­ளுக்கு மாற்­றப்­ப­ட­வி­ருக்­கின்ற நோயா­ளி­கள், தற்­கா­லிகப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் சேர்க்­கப்­ப­டு­கி­றார்­கள்.

நோயா­ளி­களை முன்­ன­தா­கவே மருத்­து­வ­ம­னை­களில் இருந்து விடு­வித்து வீடு­களில் இருந்­த­படி அவர்­க­ளுக்கு சிகிச்சை வழங்­கும் ஏற்­பாடு, தாதிமை இல்­லங்­கள், சமூக மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இதர மாற்று ஏற்­பா­டு­கள் எல்­லாம் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை அனைத்­துமே பொருத்­த­மான காலத்­தில் இடம்­பெ­றக்­கூ­டிய விவேக முயற்சி­கள் என்­ப­தால் இவை பெரி­தும் வர­வேற்­கத்­தக்­கவை.