2023 புத்தாண்டை பெருமகிழ்ச்சி நம்பிக்கையுடன் வரவேற்போம்

2023 புத்தாண்டை பெருமகிழ்ச்சி நம்பிக்கையுடன் வரவேற்போம்

3 mins read
7090c06b-f99f-4928-8077-3ab09e299b4c
-

புத்­தாண்டு வரு­கிறது என்­றாலே பொது­வாக உலகம் முழு­வ­தற்­குமே இன்பம்­தான். பர­ப­ரப்­பான கால ஓட்­டத்­தில் பல­ரும் ஒன்­று­கூடி கவ­லை­களை எல்­லாம் ஒதுக்­கி­விட்டு நன்­னம்­பிக்­கை­யு­டன் ஆடிப்பாடி மகிழ்ந்து புத்­தாண்டை வர­வேற்­பது இயற்­கை­தான்.

மானிட இனத்­தின் மனம் பொது­வாக மகிழ்ச்­சி­யையே நாடும். அது­வும் புத்­தாண்டு பிறக்கிறது என்­றால், வாழ்­வின் புதிய கால­கட்­டம் நல்­ல­ப­டி­யாகத் தொடங்­கட்­டும் என்ற நம்­பிக்கை ஊட்­டும் புத்துணர்ச்சி பொங்கி எழும்.

உலக மக்­க­ளின் இந்த விருப்­பத்தை, கண்­ணுக்­குத் தெரி­யாத கொரோனா கிருமி கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கெடுத்து ஒரு­வ­ழி­யாக்கி­விட்­டது. தொற்றுப் பிடியில் சிக்கி உல­கம் பட்­ட­பாடு கொஞ்­ச­நஞ்­ச­மல்ல.

எல்­லாமே தலை­கீழா­கி­விட்­டது. மக்­க­ளின் நட­மாட்­டத்தை முடக்­கிப்­போட்­டு­விட்டது; பொருளியலை முறித்­துப்­போட்­டு­விட்­டது; சமூக வாழ்­வின் இன்ப நாதத்தை மவு­ன­மாக்­கி­விட்­டது. பழையநிலை இன்­ன­மும் முற்றிலும் திரும்­பி­ய­பாடில்லை. சிங்­கப்­பூ­ரும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.

பொங்­கல், தீபா­வளி, நோன்புப் பெருநாள், கிறிஸ்­து­மஸ், சீனப் புத்­தாண்டு போன்ற விழாக்­களில் சம­யம் சார்ந்­த­வர்­களும் சரி சாரா­த­வர்­களும் சரி எல்­லா­ரும் ஒற்­று­மை­யா­கக் கலந்­து­கொண்டு மகிழ்­வது இயல்பு.

ஆனால் கடந்த இரண்டு ஆண்­டு­களில் இவை எல்­லாம் வழக்­கப்­படி இடம்­பெ­றா­மல், உற்­சா­கம் இன்றி, பல­ரும் சந்­தித்து மகிழ இய­லா­த­படி மகிழ்ச்சி மங்­கிய ஒரு சூழல்தான் இருந்துவந்தது.

சிங்­கப்­பூரர்­கள் கொண்­டாட்ட உணர்­வு­மிக்­க­வர்­கள். மகிழ்ச்­சி­க­ர­மா­ன­வர்­கள். அவர்­கள் வெளியே நட­மாட முடி­யா­மல், பல­ரை­யும் சந்­தித்து மகிழ இய­லா­மல் வீட்­டுக்கு வெளியே பிடித்த கடை­யில், பிடித்த உணவைச் சாப்­பி­டக்­கூ­ட இய­லா­மல் மிக­வும் பரி­த­வித்­துப் போய்­விட்­டார்­கள்.

வீட்­டின் உள்­ளே­யும் தங்­கள் அன்­றாட பழக்க வழக்­கங்­களை மக்­கள் மாற்­றிக்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. வேலை, அலு­வ­ல­கம், போன்ற காலா­கா­ல­மாக இருந்­து­வ­ரும் ஏற்­பாட்­டி­லும் மாற்றம் ஏற்­பட்­டது.

கொரோனா பிடி­யில் இருந்து உல­கம் இன்ன மும் அறவே விடுப­ட­வில்லை என்­றா­லும் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது நிம்­மதிப் பெரு­மூச்சுவிடும் அள­வுக்கு நிலவரம் திரும்பி இருக்­கிறது.

சிங்­கப்­பூர் விவே­க­மாக கொரோ­னா­வைக் கையாண்ட பாணி­தான் இதற்­குக் கார­ணம். அர­சாங்­க­மும் அதி­கா­ரி­களும் விழிப்பு நிலை­யில் இருந்து செயல்­பட்­ட­தும் தடுப்­பூசி சாத­னை­யும் குறிப்­பாக சுகா­தா­ரப்­ ப­ரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் அய­ராத அர்ப்­ப­ணிப்பு உணர்­வும், தொண்­டும் உதவிகளும் மிக முக்­கிய கார­ணி­க­ளாக உத­வின.

இதன் கார­ண­மாக சிங்­கப்­பூர் தன் எல்­லை­களை முன்­ன­தா­கவே திறந்­துவி­ட­வும் கொரோனா விதி­மு­றை­க­ளைத் தளர்த்­த­வும் முடிந்­தது. வருங்­கா­லத்தை நம்­பிக்­கை­யு­டன் வர­வேற்று தொடர்ந்து முன்­னேற தோதாக புதுத் தெம்­பு­டன் கொவிட்- 19ல் இருந்து சிங்­கப்­பூர் வெளி­வந்து இருக்­கிறது.

நினைத்­துப் பார்க்­கை­யில் இது இலே­சான சாதனை அல்ல. இமா­லய சாத­னை­யா­க­வே­தான் இதைக் கரு­த­வேண்­டும். கொவிட்-19 நமக்கு பல பாடங்­க­ளைக் கற்­பித்து இருக்­கிறது. சமூக ஒன்று கூடல்­கள் வாழ்­வில் எந்த அள­வுக்கு முக்­கி­யம் என்­பதை அது நமக்கு உணர்த்தி இருக்­கிறது.

ஒவ்­வொ­ரு­வ­ரும் தன் நல­னுக்­குத் தாங்­களே பொறுப்பு எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தும் ஒவ்­வொ­ரு­வ­ரும் மற்­ற­வர்­க­ளின் மீது அக்­கறை காட்ட வேண்­டும் என்­ப­தும் மிக முக்­கி­ய­மான பாட­மாக நம் மன­தில் பதிந்­துள்­ளது.

கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் இப்­போது நடப்­பில் இல்லை.

ஆனா­லும்­கூட, கிருமியின் பிடி­யில் இருந்து மீண்­டு­வ­ரும் மக்­களில் ஒவ்­வொ­ரு­வ­ரும் எந்த அள­வுக்­குப் பாது­காப்­பாக தொடர்ந்து நடந்து­கொள்­ள­வேண்­டும் என்­பதை சொல்­லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை.

இந்­தச் சூழ­லில்­, இரண்டு ஆண்­டு­களுக்குப் பிறகு ஊக்­கம் பொங்கி எழ நேற்­று­ ஆயிரமாயிரம் சிங்­கப்­பூ­ரர்­கள் மரினா பேயில் ஒன்­று­கூடி புத்­தாண்டை வர­வேற்­றார்­கள்.

கொரோனாக் கிருமி தலை காட்­டி­ய­தற்கு முந்­திய அள­வு­டன் ஒப்­பி­டத்­தக்க வகை­யில், சுமார் 500,000 பேர் கூடு­வார்­கள் என்­று­தான் எதிர்­பார்ப்­பதாக நகர மறு­சீ­ர­மைப்­புக் கழ­கம் முன்­ன­தாக தெரி­வித்து இருந்­தது.

சிங்­கப்­பூர் கொரோனா தொற்­றில் இருந்து விடு­பட்டு வழக்­க­மான வாழ்­வுக்­குத் திரும்­பு­வ­தைப் பறை­சாற்­று­வ­தாக அது இருந்­தது.

சிங்­கப்­பூ­ரர்­கள் கொண்­டாட்ட உணர்வுமிக்க வர்­கள். இரண்டு ஆண்­டு­கா­லம் கைக­ளைக் கட்­டிப்­போட்ட நிலை­யில் இருந்­து­வந்த மக்­கள் கட்­டுப்­பா­டு­கள் அகன்று கொண்­டாட்­டங்­களில் கலந்­து­கொள்­ளக்­கூ­டிய நிலை­யில் எந்த அள­வுக்கு ஊக்­கத்­து­டன், உற்­சா­கத்­து­டன் இருப்­பார்­கள் என்­பதைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

அதே­வே­ளை­யில், கொண்­டாட்­டங்­கள் உள்­ளிட்ட பல நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­ளும்­போது முந்­திய காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது கூடு­தல் பொறுப்­பு­க­ளு­டன் தாங்­கள் நடந்­து­கொள்ள வேண்­டும் என்­பதை மக்­கள் உணர்ந்து­கொண்டு இருக்­கி­றார்­கள் என்று நம்­ப­லாம்.

கொரோனா கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரர்­கள் பட்ட பாடு மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல. அவற்றை மறந்துவிடுவது விவே­க­மான ஒன்­றாக இருக்­காது.

கொரோனா ஒடுங்கி வரும் சூழ­லில், வரும் ஆண்­டு­களில் மகிழ்ச்சி, மன­நி­றைவு பெரு­கும் சூழ­லில் பல பண்­டி­கை­க­ளி­லும் கொண்­டாட்­டங்­களி­லும் சமூக நிகழ்ச்­சி­க­ளி­லும் வெளிப்­புற இடங்­க­ளி­லும் ஒன்­று­கூடி சிங்­கப்­பூ­ரர்­கள் மகிழ்ச்சி­யில் திளைக்­க­வி­ருக்­கி­றார்­கள்.

அந்த மகிழ்ச்­சியை வீண­டித்­து­வி­டும் வகை­யில் தாங்­கள் என்­றுமே செயல்­ப­டக் கூடாது என்­பதை உணர்ந்துள்ள மக்­கள், தங்­க­ளு­டைய நல­னுக்­கும் வீட்டு, நாட்டு நல­னுக்­கும் உறு­து­ணை­யாக இருப்­பார்­கள் என்பது திண்ணம்.