பண்பாட்டைச் சொல்லித்தரும் கலை

மல்லிகைப் பூவையும் மசாலாப் பொருட்களையும் இந்தியர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்ற லீ சோங் ‌ஷுவானுக்கு இருந்த கேள்விகளுக்கு விடையாக அமைந்துள்ளது அவர் வரைந் துள்ள வண்ண சுவரோவியம். லிட்டில் இந்தியா ஆர்ட்வொர்க் எனும் ஒவியம், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என பல அங்கங் களைக் கொண்ட கலைப் பயணத் துக்காக கிளைவ் ஸ்திரீட்டில் உள்ள கடைவீடு ஒன்றின் சுவரில் சுவரோவியம் வரையும் வாய்ப்பு லசால் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரான 24 வயது லீக்கு கிடைத்தது.

வண்ணமயமான இந்தியப் பண் பாட்டைப் பிரதிநிதிக்கும் வகையில் ஒரு சித்திரத்தைத் தீட்ட நினைத்த அவர், இந்தியரின் பண்பாடு, அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள், பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயத் தொடங்கினார். “இந்தியர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அது குறித்து தெரிந்துகொள்ள வேண் டும் என்ற வேட்கை எனக்குள் எப்போதும் இருந்தது. அதனால் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முடிவு செய்தேன்,” என்ற அவர் இதற்காக பல மணி நேரங்களை லிட்டில் இந்தியாவில் செலவிட்டார். அங்குள்ள கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் அங்கு வரும் சுற்றுப்பயணிகள் என பலரிடமும் பேசினார். மல்லிகைப் பூவிலிருந்து ஊதுபத்தி வரையிலும் அவற்றின் மூலம், பயன்பாடு என எல்லா வற்றையும் தேடி அறிந்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!