மேஷம் உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். மாறாக, உங்களுடைய உழைப்பையும் திறமையையும் நம்பி களமிறங்கினால் வெற்றி காணலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 நிறம்: மஞ்சள், ஊதா
ரிஷபம் சிலரது விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம். இன்று நீங்கள் தீட்டும் திட்டங்்கள் கச்சிதமாக அமையும். வரவுகள் அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
மிதுனம் நல்ல, ஆதாயமுள்ள தொடர்புகளை வலுப்படுத்துங்கள். இன்று வெளி வேலைகளில் திடீர் தடைகள் ஏற்படக்கூடும். எனினும் சமாளித்திடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 நிறம்: அரக்கு, ஊதா
கடகம் நல்ல செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். இன்று உங்களால் இயன்ற உதவிகளை பிறர்க்குச் செய்யலாம். சிறு செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 நிறம்: நீலம், வெண்மை
சிம்மம் நம்பிக்கையூட்டும் தகவல்கள் வந்து சேரும். அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சாதகமாகும். தடைகள் இருக்காது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 நிறம்: ஊதா, மஞ்சள்
கன்னி அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறதே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இன்று உங்கள் உழைப்புக்குரிய ஆதாயங்கள் கைமேல் கிட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 8 நிறம்: அரக்கு, பச்சை
துலாம் அதிக வரவுகளைக் குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கைகூடும். இன்று முக்கியமான சந்திப்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4 நிறம்: வெளிர்நீலம், ஊதா
விருச்சிகம் சக்திக்கு மீறிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களால் இயன்ற, முன் அனுபவமுள்ள பணிகளில் மட்டும் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 நிறம்: மஞ்சள், பச்சை
தனுசு பணிகளை பட்டியலிட்டு வரிசையாகச் செய்து முடிக்கப் பாருங்கள். உதவிகள் கிடைப்பது சந்தேகம்தான். வரவுகள், செலவுகள் இரண்டும் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
மகரம் காலையில் கோவில் தரிசனம் பெறுவது தெளிவைத் தரும். இன்று திடீர் உதவிகள் தேடி வரும். சந்திப்புகள் சாதகமாகும். தடைகள் அதிகம் இல்லை.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7 நிறம்: பச்சை, வெண்மை
கும்பம் எதற்கெடுத்தாலும் தயங்குவது கூடாது. இன்று சிறு குழப்பங்கள் தலைதூக்கும். எனினும் நாளின் முடிவிற்குள் நல்ல தீர்வுகளைக் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 நிறம்: மஞ்சள், அரக்கு
மீனம் சில்லறை விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். இன்று அகலக்கால் வைக்கும் முயற்சிகளும் கூடாது. முக்கியமான பணிகள் நடந்தேறிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 நிறம்: நீலம், சிவப்பு

