[Duplicate] உங்கள் அதிர்ஷ்டம்

2 mins read

மேஷம் திட்டமிட்டபடி பல பணிகளைக் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். அந்த வகையில், இது ஏற்றமான நாள்தான். எதிர்பாராத தொகைகள் கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 நிறம்: பச்சை, அரக்கு

ரிஷபம் அகலக்கால் வைத்துவிட்டு புலம்புவதால் பலனில்லை. இன்று எதையும் கையிருப்புக்கு ஏற்ப திட்டமிடுங்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: ஊதா, வெண்மை

மிதுனம் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்திட்டங்களை மாற்றி அமைப்பதில் தவறில்லை. இன்று அனுபவசாலிகள் உங்களை வழிநடத்துவர். செலவுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

கடகம் நட்பு ரீதியில் சில ஆலோசனைகள் தேடி வரக்கூடும். அவற்றைத் தயக்கம் இன்றி ஏற்கலாம். இன்று வெளி வேலைகள் எளிதில் நடந்தேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2 நிறம்: மஞ்சள், அரக்கு

சிம்மம் சிக்கலான சில விவகாரங்களுக்கு நல்லவிதமாகத் தீர்வு காண்பீர்கள். இன்று சிறு தடைகளை மீறி முக்கியப் பணிகளை நிறைவேற்ற இயலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 நிறம்: பச்சை, வெண்மை

கன்னி ஒருசிலர் தேடி வந்து வம்பிழுக்கக் கூடும். அத்தகையவர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். இன்று குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனநிறைவு தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 நிறம்: ஊதா, மஞ்சள்

துலாம் உங்களிடம் உதவி பெற்றவர்கள் தேடி வந்து நன்றி தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கும். இன்று நெருக்கமானவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கக் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 நிறம்: சிவப்பு, பச்சை

விருச்சிகம் முக்கியமற்ற சந்திப்புகளை ஒத்திவைப்பதில் தவறில்லை. இன்று உங்கள் கருத்துகளை நறுக்குத் தெறித்தாற்போல் முன்வைக்கவும். வரவுகள் இனிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 நிறம்: அரக்கு, நீலம்

தனுசு இனிக்கப் பேசியே கவிழ்த்துவிட சிலர் திட்டமிடுவர். இன்று அத்தகையவர்களை ஒதுக்கி வைக்கப் பாருங்கள். மாலைப்பொழுது ஓய்வாகக் கழியும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 நிறம்: பச்சை, மஞ்சள்

மகரம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் செயல்படக் கூடாது. உங்கள் பேச்சுக்கு உரிய வரவேற்பும் மரியாதையும் கிட்டும். வரவுகள் உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

கும்பம் தேவையற்ற மயக்கம், தயக்கம் கூடாது. இன்று உங்களுக்கு எதிராக எதுவும் நடந்துவிடாது. நம்பிக்கையுடன் செயல்பட்டால் ஆதாயம் காணலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

மீனம் முக்கியமானவை எனத் தெரிந்தும் சில பணிகளை ஒத்திவைப்பது சரியல்ல. இன்று உழைப்பை நம்பி களமிறங்கினீர்கள் எனில் வெற்றி வசமாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 நிறம்: ஊதா, வெண்மை