மேஷம் நாளின் தொடக்கத்தில் சிறு பின்னடைவை எதிர்கொள்வீர்கள். எனினும் சுதாரித்துக் கொண்டு பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். சந்திப்புகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
ரிஷபம் பொதுநலம் கருதி மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறும். இன்று உங்களைப் பற்றிய விமர்சனங்களைக் காதில் வாங்க வேண்டாம். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 நிறம்: ஊதா, வெண்மை
மிதுனம் அவசரம், முக்கியம் என கருதும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். இன்று நேர்வழியில் செயல்பட்டால் ஏற்றம் காணலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: பச்சை, நீலம்
கடகம் எல்லாம் இன்பமயம் என்று சொல்லும் வகையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். இன்று புதுப் பொறுப்புகள் தேடிவரும். மாலையில் ஓய்வு உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 நிறம்: அரக்கு, மஞ்சள்
சிம்மம் உங்களது செயலாற்றல் பளிச்சிடும். தொடங்கிய வேகத்தில் பணிகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். திடீர் செலவுகளும் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
கன்னி உங்களால் இயன்ற பணிகளை மட்டும் ஏற்கவும். பிறரது வற்புறுத்தலுக்காக எதையும் செய்யக்கூடாது. புது வரவுகள் கிடைத்திடும். தடைகள் இல்லை.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: பச்சை, வெண்மை
துலாம் எதிர்பாராத தொகைகளும் உதவிகளும் கிடைப்பது உற்சாகம் அளிக்கும். இன்று வெளி வேலைகள் பலவற்றைக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 நிறம்: சிவப்பு, ஊதா
விருச்சிகம் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் எதையும் சாதித்துவிட இயலாது. இன்று முக்கியச் சந்திப்புகளின்போது அளவோடு பேசுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 நிறம்: மஞ்சள், பச்சை
தனுசு நீண்ட நாள் முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். இன்று கோவில் வழிபாட்டுக்குப் பின் பணிகளைத் தொடங்கவும். நல்ல நாள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 நிறம்: வெண்மை, நீலம்
மகரம் பிறர் கூறும் அறிவுரைகளை செவிமெடுக்கப் பாருங்கள். இன்று யாரையும் திடீரெனப் புறக்கணிப்பது சரியல்ல. சிறு தடைகளை எளிதில் சமாளித்திடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7 நிறம்: பச்சை, மஞ்சள்
கும்பம் குறைகூறும் பேர்வழிகளை அறவே கண்டுகொள்ள வேண்டாம். இன்று உங்கள் போக்கில் செயல்பட்டீர்கள் எனில் எல்லாம் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 நிறம்: மஞ்சள், ஊதா
மீனம் ஒரே சமயத்தில் பல பொறுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் நிலவும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் கச்சிதமாக அமையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 நிறம்: பச்சை, வெண்மை

