மேஷம் திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிக்க அதிக உழைப்பு தேவைப்படும். இன்று திடீர் தடைகளும் ஏற்படக்கூடும். புது, மங்கலச் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
நிறம்: அரக்கு, பச்சை
ரிஷபம் நாளின் தொடக்கத்தில் சிறு குழப்பங்களுக்கு ஆட்படுவீர்கள் எனில் பின்னர் சுதாரித்து நடைபோட முடியும். இன்று உதவிகளை எதிர்பார்க்காமல் தனித்துப் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
நிறம்: நீலம், மஞ்சள்
மிதுனம் நம்பிக்கை யானவர்கள் எனக் கருதியவர்களே உங்களைக் காலை வாரிவிட வாய்ப்புண்டு. இன்று முக்கியப் பணிகளை நேரடிக் கண்காணிப்பில் செய்து முடிக்கப் பாருங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
நிறம்: ஊதா, வெண்மை
கடகம் விறுவிறுப்பான இந்நாளில் உங்களது செயல்திட்டங்கள் எதுவும் சோடை போகாது. உழைப்புக்குரிய ஆதாயங்கள் தள்ளிப்போனாலும் பாராட்டுகள் உடனுக்குடன் கிட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
நிறம்: ஊதா, சிவப்பு
சிம்மம் சிலரது பேச்சும் போக்கும் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. வரவுகள் இனிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
நிறம்: பச்சை, வெண்மை
கன்னி கூடுமானவரை தனித்துச் செயல்படப் பாருங்கள். அதற்காகத் தேடி வந்து தோள்கொடுப்பவர்களை புறக்கணிக்கக் கூடாது. மாலையில் ஓய்வு கிட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
நிறம்: அரக்கு, மஞ்சள்
துலாம் உங்களைப் பற்றி சிலர் முன்வைக்கும் நியாயமற்ற விமர்சனங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. இன்று உங்கள் போக்கில் நடைபோடவும். வரவுகள் ஏற்றம் காணும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
நிறம்: நீலம், வெண்மை
விருச்சிகம் குடும்ப நலன் கருதி மேற்கொண்ட நடவடிக்கைகள் சாதகமாகும். இன்று இடையூறுகளை மீறி பணிகளைக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள் என நம்பலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
நிறம்: அரக்கு, பச்சை
தனுசு ஒருசிலர் தவறான பாதையில் செல்ல தூண்டிவிடக்கூடும், எனினும், அதற்கு செவிசாய்க்க வேண்டாம். மாலைக்குள் வரவுகள், செலவுகள் என இரண்டும் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: பச்சை, மஞ்சள்
மகரம் குடும்பத்தினருடன் கணிசமான பொழுதை செலவிட முடியும். பல நாட்களாக இழுத்தடித்து வந்த பணிகள் இப்போது முன்னேற்றம் காண்பது உற்சாகம் அளிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
நிறம்: ஊதா, சிவப்பு
கும்பம் வெளி வேலைகள் சற்றே குறைந்திருக்கும். இன்று தடைகளின்றி பல பணிகள் நடந்தேறும். முக்கியச் சந்திப்புகள் தேடி வரும். பண விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
நிறம்: மஞ்சள், பச்சை
மீனம் கோபம், வீண் வேகம் ஆகியவற்றை மூட்டைகட்டி விடுங்கள். இன்று அமைதியான போக்கும் நிதானமும்தான் உங்களுக்குரிய ஆதாயங்களை தேடித்தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
நிறம்: ஊதா, வெண்மை

