மேஷம் ஆதாயம் உள்ள பணிகளில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். குடும்ப நலன் குறித்த முயற்சிகள் வேகம் காணும். உழைப்புக்குரிய ஓய்வெடுப்பது முக்கியம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: நீலம், மஞ்சள்
ரிஷபம் உங்களது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுபவர்களை எச்சரித்து வைத்திருப்பது நல்லது. வெளி வேலைகள் திட்டமிட்டபடியே நடந்தேறும். செலவுகள் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
நிறம்: ஊதா, வெண்மை
மிதுனம் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக பிறரிடம் வெறுப்பு காட்டுவது கூடாது. இன்று இதை மனத்தில் கொள்ளுங்கள். எதிர்பாராத தொகைகள் கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
நிறம்: பச்சை, மஞ்சள்
கடகம் இன்றைய நாள் உற்சாகமாகத் தொடங்கும். முன்பு அரைகுறையாக விட்டிருந்த பணிகளை இப்போது தூசுதட்டலாம். இதில் நிச்சயம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
நிறம்: ஊதா, மஞ்சள்
சிம்மம் உங்களுடன் போட்டிப் போட நினைப்பவர்களுடன் மோத வேண்டாம். மாறாக அவர்களை அரவணைக்கும் விதமாகச் செயல்படுங்கள். பணிச்சுமை குறைவாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நிறம்: பச்சை, அரக்கு
கன்னி வரவுகள் எதிர்பார்த்த இடத்தில் திடீர் செலவுகள் முளைப்பது அதிர்ச்சி தரும். பண விவகாரங்களில் யாரையும் நம்பிவிடக் கூடாது. சிறு தடைகளால் பாதிப்பில்லை.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
நிறம்: சிவப்பு, நீலம்
துலாம் புதுப் பொறுப்புகள் தேடி வரும் வாய்ப்புண்டு. அவற்றை ஏற்கும் முன் சாதக பாதகங்களை ஆராய்வது முக்கியம். அனுபவசாலிகளின் ஆலோசனைகள் கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
நிறம்: பச்சை, மஞ்சள்
விருச்சிகம் பிறர் கூறும் நல்ல கருத்துகளை ஏற்பதில் தயக்கம் கூடாது. இன்றைய வேலைகளில் சிறு தடைகள் எட்டிப்பார்க்கும். அவற்றைச் சமாளிக்க நண்பர்களுடன் கைகோக்கலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
நிறம்: நீலம், வெண்மை
தனுசு எதிரிகள் எனத் தெரிந்தபிறகும் அலட்சியமாக இருந்தீர்கள் எனில், வீண் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இதை கவனத்தில் கொள்ளுங்கள். புது வரவுகளுக்கு வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
நிறம்: ஊதா, மஞ்சள்
மகரம் வீண் பதற்றம் வேண்டாம். நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்துங்கள். திடீர், முக்கியமான செலவுகள் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: நீலம், பச்சை
கும்பம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆதாயங்களைக் கேட்டுப் பெறுங்கள். சிறு தடைகளைச் சமாளித்திடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
நிறம்: அரக்கு, மஞ்சள்
மீனம் பல நாள்களாக உங்கள் மனநிம்மதியைக் கெடுத்த விவகாரத்தில் நல்ல தீர்வு உண்டாகும். வெளி வேலைகள் சிறு அலைச்சலும் இன்றி எளிதில் முடியும். ஆதாயம் கிட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
நிறம்: பச்சை, வெண்மை

