அன்புள்ள ரிஷப ராசிக்காரர்களே,
இவ்வாரம் புதன், சுக்கிரன், செவ்வாய், கேது, சந்திரன் ஆகியோரின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளன. சூரியன், ராகுவால் தொல்லை இருக்கும். சனி, குரு ஆகியோர் வலுவிழந்திருப்பர்.
எத்தகைய சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் செயல்படக்கூடியவர்கள் நீங்கள். தற்போது முக்கிய கிரகங்களின் ஆதரவு இல்லை என்பதால் எல்லாமே தலைகீழாகிவிடும் எனக் கருத வேண்டாம். இவ்வாரம் உங்கள் இயல்புக்கேற்ப துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் நடைபோட்டீர்கள் எனில் தடைகளைக் கடந்து ஏற்றம் காண்பீர்கள். அடுத்து வரும் நாள்களில் வருமான நிலை சுமார் எனலாம். எனவே கையிருப்புக்கு ஏற்ப எதையும் திட்டமி்ட்டுக்கொள்வது நல்லது. கூடுதல் வருமானத்துக்கு முயற்சி செய்வதைவிட சிக்கனம் காப்பது நல்லது. தற்போது தடைகள் சற்றே அதிகரித்திருக்கும். எனவே திட்டமிட்ட பணிகளை முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். புதுப்பொறுப்புகள், புது முயற்சிகளுக்கு இது உகந்த நேரமல்ல. பயணங்கள், மங்கலப் பேச்சுகளையும் ஒத்தி வையுங்கள். சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையக்கூடும். சிறு மருத்துவச் செலவுகள் உண்டு. பணியாளர்களும் வி்யாபாரிகளும் உழைப்பில் குறைவைக்கக் கூடாது. வார இறுதியில் சூழ்நிலை சாதமாகும். தடைகளும் குறையும்.
இல்லறத்தில் நீடித்த குழப்பங்கள் முடிவுக்கு வரும்.
அனுகூலமான நாள்கள்: மே 19, 20
அதிர்ஷ்ட எண்–கள்: 4, 7

