மூத்த இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து கடந்த மாதம் சென்னை திரும்பிய அவர், கடந்த மூன்று நாள்களாகச் சிகிச்சையில் உள்ளார்.
தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், “தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது; வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்,” என்று குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

