மேஷம் (ARIES)

மேஷம் (ARIES)

1 mins read

அன்­புள்ள மேஷ ராசிக்­கா­ரர்­களே,

மாதக் கோள்களான புதன், சுக்கிரன் சிறப்பான இடங்களில் சஞ்சரித்து அருள்புரிகின்றன. சனி, கேது, ராகு, சூரியன், செவ்வாய், சந்திரனால் நலமில்லை. குருவால் நன்மை, தொல்லை இருக்காது.

இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செயல்படக்கூடியவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் சில புதுப் பிரச்சினைகள் முற்றுகையிடக்கூடும். திடீர் எதிரிகள் முளைப்பார்கள். தேவையின்றி சிலர் தேடிவந்து வம்பிழுக்கும் வாய்ப்புண்டு. ஆனால், இதுகுறித்து யோசித்து முடங்கிவிட வேண்டாம். இவை கடவுள் உங்களுக்கு வைக்கும் சிறு தேர்வு என்பதே உண்மை. உங்கள் இயல்புக்கேற்ப துணிச்சலுடன் செயல்பட்டால் இதில் தேர்ச்சி பெற்று வெற்றிநடை போடலாம். தற்போது பொறுப்புகள் அதிகரிக்கும். அவற்றை நிறைவேற்ற அதிக உழைப்பு தேவை. வருமான நிலை மனநிறைவு தரும். தேவைகள் பலவும் பூர்த்தியாகும். உடல்நலம் ஒரே சீராக இருக்காது. உழைப்புக்குரிய ஓய்வெடுப்பது நல்லது. சொத்துகள், மங்கலப் பேச்சு தொடர்பான நடவடிக்கைகளில் நிதானம் தேவை. பணியாளர்களும் வியாபாரிகளும் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது. வார இறுதியில் நல்ல செய்தி தேடி வரக்கூடும்.

குடும்ப விவகாரங்களை வெளியாட்களுடன் விவாதிக்க வேண்டாம்.

அனுகூலமான நாள்கள்: மே 21, 23

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5