ரிஷபம் (TAURUS)

ரிஷபம் (TAURUS)

1 mins read

அன்­புள்ள ரிஷப ராசிக்­கா­ரர்­களே,

ஆண்டுக் கோள்களான குரு, சனீஸ்வரன் அமைப்புகள் அருமை எனலாம். புதன், சுக்கிரனின் ஆதரவு கிடைத்திடும். சூரியன், செவ்வாய், ராகு, கேது, சந்திரனால் நலமில்லை.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய பண்பாளர்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்களது வருமான நிலை சிறப்பாக இருக்கும். வழக்கமான வரவுகள் குறித்த நேரத்தில் கிடைப்பதால் செலவுகளை எளிதில் சமாளித்திட முடியும். தற்போது சிறு அளவில் காரியத் தடைகள் முளைக்கலாம். எனினும் அவற்றைச் சமாளித்து முக்கிய பணிகளை முடித்திடுவீர்கள். புது முயற்சிகளில் ஈடுபடலாம் என்றாலும் புதியவர்களுடன் இணைந்து எதையும் செய்ய வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதும் கூடாது. முன்பே நிச்சயித்த மங்கல காரியங்கள் அமோகமாக நடந்தேறும். புதிய நட்புகள் கிடைக்கலாம். அவர்களுடன் அளவோடு பழகுங்கள். வழக்குகளில் திடீர் திருப்புமுனை உண்டாகும். சொத்துகள் வகையில் சிலருக்கு ஆதாயம் கிட்டும் எனில், சிலருக்கு முக்கியச் செலவு உண்டாகும். பணியாளர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கூட்டுத்தொழில் புரிவோர் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் பாராட்டுவது நல்லது. வார இறுதியில் முக்கியத் தகவல் தேடி வரக்கூடும்.

இல்லறம் இனிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 17, 19

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9